×

வாகன ஓட்டிகள் வலியுறுத்தல் கும்பகோணம், திருவிடைமருதூர் திருப்பனந்தாளில் வெற்றி பெற்றவர்களின் விவரம்

கும்பகோணம், டிச. 3: உள்ளாட்சி தேர்தலில் கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாளில் வெற்றி பெற்றவர்களின் விவரம் வருமாறு:கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாககுடி ஊராட்சி தலைவராக ராஜலெட்சுமி, திருப்புறம்பியம் ஊராட்சி தலைவராக வைஜெயந்தி, மகாராஜபுரம் ஊராட்சி தலைவராக புவனேஸ்வரி, மானம்பாடி ஊராட்சி தலைவராக தாமரைசெல்வி, சேங்கனுார் ஊராட்சி தலைவராக சுமதி வெற்றி பெற்றனர். புத்துார் ஊராட்சி தலைவராக ராதிகா, அணக்குடி ஊராட்சி தலைவராக மலர்கொடி, அத்தியூர் ஊராட்சி தலைவராக ஜெயசீலா, விளந்தகண்டம் ஊராட்சி தலைவராக மலர்விழி, குமரன்குடி ஊராட்சி தலைவராக சங்கர், உத்தமதாணி ஊராட்சி தலைவராக பானுமதி வெற்றி பெற்றனர்.

இதேபோல் தேவனாஞ்சேரி ஊராட்சி தலைவராக ராஜாராம், அகராத்துார் ஊராட்சி தலைவராக வெங்கடேசன், கோவிலாச்சேரி ஊராட்சி தலைவராக சுதாகர் வெற்றி பெற்றனர். ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் 1வது வார்டில் அதிமுகவை சேர்ந்த கண்ணகி, 2வது வார்டில் பாமக வேட்பாளர் மருதையன், 3வது வார்டில் திமுக வேட்பாளர் விஜயா, 4வது வார்டில் பாஜ வேட்பாளர் மகேஸ்வரி, 5வது வார்டில் அதிமுக வேட்பாளர் சித்ராபரமசிவம் ஆகியோர் வெற்றி பெற்றனர். 6வது வார்டில் திமுக வேட்பாளர் தியாகராஜன், 7, 8வது வார்டு அதிமுக வேட்பாளர்கள் மாரியம்மாள், சசிகலா ஆகிய 2 பேரும் வெற்றி பெற்றனர்.
திருப்பனந்தாள் ஒன்றியத்தில் திட்டச்சேரி ஊராட்சி தலைவராக கொடியரசு, சரபோஜிராஜபுரம் ஊராட்சி தலைவராக தமிழ்மணி, குலசேகரநல்லூர் ஊராட்சி தலைவராக சுகன்யா, இருமூலை ஊராட்சி தலைவராக மணிமாறன், நெய்வாசல் ஊராட்சி தலைவராக முனுசாமி வெற்றி பெற்றனர். திருமங்கைச்சேரி ஊராட்சி தலைவராக ராஜேஷ், நெய்குப்பை ஊராட்சி தலைவராக ரேவதி, வேலூர் ஊராட்சி தலைவராக பாரி, கருப்பூர் ஊராட்சி தலைவராக அனுசியா, கீழ்மாந்துார் ஊராட்சி தலைவராக ராஜேஷ், செருகுடி ஊராட்சி தலைவராக வேம்பு வெற்றி பெற்றனர்.

இதேபோல் காவனூர் ஊராட்சி தலைவராக ஜெயமணி, அத்திப்பாக்கம் ஊராட்சி தலைவராக சரோஜா, மேலக்காட்டூர் ஊராட்சி தலைவராக விஜயலட்சுமி, குறிச்சி ஊராட்சி தலைவராக குணசேகரன், சிதம்பரநாதபுரம் ஊராட்சி தலைவராக அன்சாரி, சிக்கல்நாயக்கன்பேட்டை ஊராட்சி தலைவராக செல்லபிரபா, முள்ளுகுடி ஊராட்சி தலைவராக அம்பிகா வெற்றி பெற்றனர்.கோவில்ராமபுரம் ஊராட்சி தலைவராக மகேஸ்வரி, மரத்துறை ஊராட்சி தலைவராக ராமச்சந்திரன், அணைக்கரை ஊராட்சி தலைவராக அஞ்சம்மாள், உக்கரை ஊராட்சி தலைவராக அசோகன், மகாராஜபுரம் ஊராட்சி தலைவராக உதயகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.திருப்பனந்தாள் ஒன்றியக்குழு உறுப்பினராக 1வது வார்டுக்கு காங்கிரசை சேர்ந்த ராஜேஸ்வரி லோகநாதன், 2வது வார்டில் அதிமுகவை சேர்ந்த ராஜேஸ்வரி, 3வது வார்டில் பாமகவை சேர்ந்த தமயேந்தி, 4வது வார்டில் திமுகவை சேர்ந்த சீத்தாபதி, 5வது வார்டில் திமுகவை சேர்ந்த சம்பத், 6வது வார்டில் அமமுக கருணாநிதி, 7வது வார்டில் திமுகவை சேர்ந்த சுதா, 8வது வார்டில் திமுகவை சேர்ந்த குணசுந்தரி, 9வது வார்டில் திமுகவை சேர்ந்த சரஸ்வதி வெற்றி பெற்றனர்.

திருவிடைமருதுார் ஒன்றிய பகுதியில் நரசிங்கன்பேட்டை ஊராட்சி தலைவராக மாலதி, பருத்திக்குடி ஊராட்சி தலைவராக தமிழரசி, ஆவணியாபுரம் ஊராட்சி தலைவராக முகமது நூருல் சித்திக், மஞ்சமல்லி ஊராட்சி தலைவராக ரங்கநாதன், எஸ்.புதூர் ஊராட்சி தலைவராக காமவள்ளி, கோவிந்தபுரம் ஊராட்சி தலைவராக குமார், வண்ணக்குடி ஊராட்சி தலைவராக கஸ்தூரி, தேப்பெருமாநல்லூர் ஊராட்சி தலைவராக குமரவேல், சாத்தனூர் ஊராட்சி தலைவராக தட்சிணாமூர்த்தி, சூரியனார்கோவில் ஊராட்சி தலைவராக முருகன், திருமங்கலக்குடி ஊராட்சி தலைவராக பத்மினி, திருவிசநல்லூர் ஊராட்சி தலைவராக மாரியம்மாள் வெற்றி பெற்றனர்.

திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் 1வது வார்டில் அதிமுக கிருஷ்ணவேணி, 2வது வார்டில் திமுக பாத்திமாபேகம், 3வது வார்டில் திமுக பத்மாவதி, 4வது வார்டில் மதிமுக முருகன், 5வது வார்டில் திமுக அன்பழகு, 6வது வார்டில் அதிமுக அசோக்குமார், 7வது வார்டில் அதிமுக சதீஷ்குமார், 8வது வார்டில் திமுக வேட்பாளர் சாமிதுரை வெற்றி பெற்றுள்ளனர்.

Tags : Motorists ,Winners ,Kumbakonam ,Thiruvaiyamarudur Thiruppanandal ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...