×

கடன் வாங்கித்தருவதாக கூறி தேனியில் வடமாநில கும்பல் பல ஆயிரம் பேரிடம் மோசடி போலீஸ் எச்சரிக்கை

தேனி, ஜன. 3: மிகப்பெரிய தனியார் நிதி நிறுவனங்களிடம் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கித்தருவதாக கூறி தேனியில் வடமாநில கும்பல் பல ஆயிரம் பேரிடம் மோசடி செய்து வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து தேனி போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: வட மாவட்டங்களை சேர்ந்த ஒரு கும்பல் தேனியில் முகாமிட்டு வட மாவட்டங்களில் மிகப்பெரிய முதலாளிகளிடமும், பெரிய தனியார் நிதி நிறுவனங்களிடமும் கடன் வாங்கித்தருவதாக கூறி பலரை ஏமாற்றி வருகின்றனர். கடன் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களிடம் முதலில் பதிவு கட்டணம், கமிஷன் என பல்வேறு செலவுகளை கூறி பல லட்சம் ரூபாய் வசூலித்து விட்டு அவர்களை ஏமாற்றி விடுகின்றனர். இப்படி ஏமாற்றம் அடைந்த பலர் இது குறித்து போலீசாரிடம் புகார் கூறி வருகின்றனர். இந்த கும்பலின் செயல்பாட்டினை போலீசாரும் கண்காணித்து வருகின்றனர். விரைவில் இந்த ேமாசடி கும்பலை சேர்ந்தவர்கள் போலீசிடம் சிக்குவார்கள். யாராவது கடன் வாங்கித்தருவதாக கூறினால் அவர்களுக்கு யாரும் கமிஷன் பணமோ, சர்வீஸ் சார்ஜோ வழங்க வேண்டாம். மைக்ரோ பைனான்ஸ் மற்றும் கார்ப்பரேட் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற விரும்பினால், கடன் தேவைப்படுபவர்கள் நேரடியாகவே அணுகலாம். இவ்வாறு கூறினர்.

Tags : fraudsters ,North Theni ,
× RELATED 420 மோசடிப் பேர்வழிகள் வரும் தேர்தலில் 400...