×

மூணாறு இடமலைகுடி மக்களை சந்தித்த காங்.தலைவர்

மூணாறில், ஜன.3: மூணாறில் ஆதிவாசி மக்கள் வசிக்கும் இடமலைகுடி பகுதியை கேரளா எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா நேரில் சென்று பார்வையிட்டார். கேரளா மாநிலத்தில் ஆதிவாசி மக்கள்மூணாறில் உள்ள இடமலைகுடியில் அதிகம் வசிக்கின்றனர். இங்கு ஆண்டவன்குடி, சொசெட்டிகுடி, பறளியார்குடி என 24 குடிகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆதிவாசி மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு கேரள அரசால் ஒதுக்கப்பட்ட நிதி சென்றடையவில்லை என கூறப்படுகிறது. அத்துடன் இப்பகுதி மக்கள் சாலை, மருத்துவமனை, கல்வி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கேரளா எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா இடமலைகுடிக்கு நேரில் சென்று மக்களை சந்தித்தார். அவரிடம், அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். கேரளா அரசு இடமலை குடிக்கு ஒதுக்கிய நிதி தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், சாலை, மருத்துவமனை, கல்வி மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாமல் தவிப்பதாக கூறினர்.

மார்க்சிஸ்ட் அரசல் நடத்த முடியாத திட்டங்கள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் செய்து தரரப்படும் என்று உறுதி அளித்தார்.மேலும் கல்வி பணிகளுக்காக இடமலைகுடிக்கு ரூ.66 லட்சம் ஒதுக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவருடன் வந்த இடுக்கி எம்பி டீன்குரியகோஸ் கூறினார். பின்னர் தேசிய விளையாட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்ற இடமலை குடியில் உள்ள பத்மகுமார், ஷிவாமுருகன், பிந்து ஆகியோரை ரமேஷ் சென்னிதாலா கவுரவித்தார் இந்த நிகழ்ச்சியில் கேபிசிசி துணைத்தலைவர் ஏ.கே.மணி, மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜி.முனியாண்டி, மூணாறு வட்டார காங்கிரஸ் தலைவர் டி.குமார், இடுக்கி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் இப்ராஹிம் குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Munnar ,
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு