×

கும்பகோணம் வாக்கு எண்ணும் மையத்தில் வடைக்காக தகராறில் ஈடுபட்ட பெண் ஊழியர்கள்

கும்பகோணம், ஜன. 3: கும்பகோணம் வாக்கு எண்ணும் மையத்தில் வடைக்காக பெண் ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டனர்.கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த பணிக்காக கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட பெண் உதவியாளர்களை பல்வேறு பணிக்காக அழைத்து வந்தனர். அப்போது அலுவலர்கள் அதிகமாக இருந்ததால் பிரிவுகளாக பிரித்து வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அதிகாரிகள், அலுவலர்களுக்கு தண்ணீர், வடை, டீ, காபி மற்றும் அவர்களுக்கு தேவையான தேர்தல் தொடர்பான பொருட்களை ஊழியர்கள் வழங்கி வந்தனர்.

காலையில் இருந்து மாலை வரை வாயிலில் அமர்ந்திருந்த பெண் ஊழியர்களுக்கு டீ, வடை கொடுக்காததால் பசியுடன் வேதனையில் இருந்து வந்தனர். அப்போது நேற்று மாலை பெண் உதவியாளர் ஒருவர், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு வடை எடுத்து சென்றபோது பசியில் இருந்த பெண் உதவியாளர் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இதையறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வடைக்காக சண்டை போட்டீர்கள் என்றால் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்து விடுவோம் என்று போலீசார் கூறினர். இதையடுத்து 2 பேரும் சமாதானமாக சென்றனர்.

Tags : dispute ,Counting Center ,Kumbakonam Voting ,
× RELATED சென்னை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் காவல் ஆணையர் ஆய்வு!!