×

கடமலை - மயிலை ஒன்றியத்தில் திமுக வேட்பாளர்கள் ஏழு பேர் வெற்றி

வருசநாடு, ஜன.3: கடமலை - மயிலை ஒன்றியத்தில் 7 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தேனி மாவட்டம், கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. இங்கு மொத்தம் 54 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 64,433 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 46,859 பேர் வாக்களித்தனர். நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் வெற்றி வேட்பாளர்கள் விபரம் வருமாறு: கண்டமனூர் 1வது வார்டு சந்திரா (அதிமுக), கண்டமனூர் 2வது வார்டு அன்னபூரணி (அதிமுக), பாலூத்து 3வது வார்டு சேகரன் (அதிமுக), கடமலைக்குண்டு 4வது வார்டு நாகராணி (அதிமுக), 5வது வார்டு உமாமகேஸ்வரி (திமுக), 6வது வார்டு மயிலாடும்பாறை மச்சக்காளை (திமுக), 7வது வார்டு மந்திசுனை மூலக்கடை ஸ்கைலாப்ராணி(அதிமுக), 8வது வார்டு முத்தாலம்பாறை தமிழ்ச்செல்வன் (திமுக), 9வது வார்டு குமணன்தொழு பிரபாகரன்(திமுக), 10வது வார்டு மேகமலை ஆயுதவல்லி (திமுக),11வது வார்டு தங்கம்மாள்புரம் சிலம்பரசன்( அதிமுக),12வது வார்டு முருகன்(அதிமுக), 13வது வார்டு கவிதா(திமுக), 14வது வார்டு சித்ரா(திமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Tags : DMK ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...