×

முத்துப்பேட்டை ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளில் திமுக ஆதரவாளர்கள் அமோக வெற்றி

முத்துப்பேட்டை, ஜன.3: முத்துப்பேட்டை ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு திமுக ஆதரவாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 29 ஊராட்சி மன்றத்திற்கு 135 பேர் போட்டியிட்டனர். இதில் முத்துப்பேட்டை மேலநம்மங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் மேரி (அதிமுக), கீழநம்மங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் முருகப்பன் (அதிமுக), தம்பிக்கோட்டை கீழக்காடு ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி (திமுக), ஜாம்புவானோடை ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன் (திமுக), கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா (அதிமுக), உதயமார்தாண்டபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மகேந்தின் (அமமுக), குன்னலூர் ஊராட்சி மன்ற தலைவர் வான்மதி(சுயே), எடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா (திமுக), முத்துப்பேட்டை உட்பூர் ஊராட்சி மன்ற தலைவர் அரவிந்தன்(சுயே), ஆலங்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி(அதிமுக), கீழபெருமழை ஊராட்சி மன்ற தலைவர் செல்வி(அதிமுக),வடசங்கேந்தி ஊராட்சி மன்ற தலைவர் கீதா(இ.கம்யூ), ஆரியலூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் (சுயே), இடும்பாவனம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்செல்வி(திமுக), தொண்டியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் கமலா(அதிமுக), கற்பகநாதர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொதியப்பன் (திமுக), தோலி ஊராட்சி மன்ற தலைவர் இலக்குவன் (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றதாக 8.30 மணி நிலவரப்படி அறிவிக்கப்பட்டனர்.

Tags : DMK ,supporters ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி