×

மன்னார்குடியில் திமுக அதிக இடங்களில் வெற்றி

மன்னார்குடி, ஐன.3: நேற்று இரவு 8 மணி வரை 22 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் 6 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 1வது வார்டு போட்டியிட்ட சத்தியபாமா (அதிமுக), 2வது வார்டு கோமதி (அதிமுக), 3 வது வார்டு வனிதா அருள்ராஜன் (சிபிஐ), 4 வது வார்டு குமரேசன் (திமுக), 5 வது வார்டு அருண் (திமுக), 8 வது வார்டு ஜெயந்தி சந்திரசேகரன் (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதுபோல், 51 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் 17 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பருத்திக்கோட்டை செல்வராஜ் (திமுக), வடபாதிமங்கலம் சித்ரஞ்சன் (திமுக), ராமாபுரம் விழிவழகன் (திமுக), கொத்தங்குடி கார்த்திகா (திமுக), வேட்டைத்திடல் சத்தியமூர்த்தி (அதிமுக), பழையனூர் செந்தில்குமார் (திமுக), வக்ரா ரல்லூர் இளமுனிஷா பேகம் (திமுக), பெரிய கொத்தூர் கண்ணதாசன் (திமுக), அரிசந்திரபுரம் சுகந்தி செல்வம் ( திமுக), வட கோவலூர் ரேவதி (திமுக), புள்ளமங்கலம் பானுமதி ( திமுக), சவளக்காரன் சாந்தி (சிபிஐ), பூந்தாழங்குடி சரவணன் (திமுக), கீழ மணலி செல்வி (அதிமுக), ஒகைப் பேரையூர் முருகையன் (திமுக), சித்தனக் குடி தமிழ்ச் செல்வன் (திமுக), பாரதி மூலங்குடி இந்து மதி (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.

Tags : DMK ,places ,Mannargudi ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...