×

திறந்த வெளியில் சடலங்கள் எரிப்பு அவதிப்படும் மக்கள்

பரமக்குடி, ஜன.3:  பரமக்குடியில் கடந்த 2012ம் ஆண்டில் ரூ.1 கோடி செலவில் புதிதாக எரிவாய்வு தகனமேடை அமைக்கும் பணி தொடங்கியது. தனக மேடை அமைக்கும் போது இந்து மத சடங்குகளுக்கு எதிராக தகனமேடை அமைக்கப்பட்டதாக பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனை சரி செய்ய கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறைகள் சரி செய்யப்பட்டு தகனமேடை திறக்கப்பட்டது. ஆனால் உடலை எரிக்க வரும் நபர்களிடம் கூடுதல் பணம் வசூல் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றது. சிவகங்கை, காரைக்குடி, மதுரை போன்ற ஊர்களில் உள்ள எரிவாயு தகனம் செய்ய ரூ.800 முதல் ரூ.1000 வரை மட்டுமே வசூல் செய்யபடுகிறது. ஆனால், பரமக்குடியில் கூடுதலாக ரூ.400 முதல் ரூ.800 வரை இறந்தவர்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ப பலித்த மட்டும் பணம் வசூல் செய்யப்படுகிறது. இதுகுறித்து பொதுநல அமைப்புகள் நகராட்சி மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

அதுபோல், கடந்த இரண்டு மாதங்களாக எரிக்கும் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உடலை வெட்ட வெளியில் வைத்து எரித்து வருகின்றனர். இதனால் அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் துர்நாற்றத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்,”தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மற்றும் போராட்டங்களால் கடந்த 2013ல் மின்சார தகனமேடை கொண்டு வரப்பட்டது. இதனால் கடந்த 6 வருடங்களாக எந்த தொந்தரவு இல்லாமல் இருந்து வந்தோம். ஆனால் தற்போது இரண்டு மாதங்களாக மின்சார தகன மேடையில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக வெளியில் வைத்து எரித்து வருகின்றனர். அதனால் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பரமக்குடி நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்து மின்சார தகனமேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை