×

சாலையோரம் விற்பதால் இடையூறு புதிதாக மீன் மார்க்கெட் அமைக்க வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.3:  ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியில் ரோட்டில் மீன் வியாபாரம் செய்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகின்றது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று. இங்கு சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராமப் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு கடற்கரை பகுதிகளான தேவிபட்டிணம் ,திருப்பாலைக்குடி, மோர் பன்னை, காரங்காடு, முள்ளிமுனை போன்ற கிராமங்களில் உள்ள மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் இங்குள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் ரோட்டின் ஒரத்தில் போட்டு வெட்ட வெளியில் மீன் வியாபாரம் செய்கின்றனர்.

ஒரு சில நேரங்களில் வாகனங்களால் டிராபிக் ஆகி விடுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகின்றது. அவ்வப்போது பேரூராட்சியினரும், காவல் துறையும் இவர்களை அப்புறப்படுத்துகின்றனர். மீண்டும் மறுபடியும் அதே பகுதியில் வந்து விற்பனை செய்கின்றனர். அதேபோல் இந்த ரோட்டில் விற்கப்படும் மீன்களால் சுகாதாரக்கேடு ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது. காரணம் ரோட்டில் உள்ள தூசிகள் மற்றும் வாகன புகைகள் இவை அனைத்தும் மீன்களில் படிகின்றது. அத்துடன் வெயிலில் மீன்கள் கிடப்பதால் நொந்து விரைவில் கெட்டு போய் விடும். இதனை சமைத்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், பேரூராட்சி நிர்வாகம் இவற்றை அப்புறப்படுத்துவதுடன் அவர்களுக்கு முறையான ஒரு இடத்தை தேர்வு செய்து புதிதாக ஒரு மீன் மார்க்கெட் அமைத்து கொடுத்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இதனால் நுகர்வோர் மற்றும் வியாபாரிகள், வாகன ஒட்டிகள் அனைவருக்கும் பயனளிக்கும் என்கின்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை