×

தென்னையை தாக்கும் வெள்ளை ஈ

தொண்டி, ஜன.3: தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த வேளாண்மைத் துறையினர் கூறுகையில், தென்னை ஓலைகளின் அடிப்பாகத்தில் தென்னையை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை பெண் ஈக்கள் மஞ்சள்நிற நீள்வட்ட முட்டைகளையிடுகிறது. அதிலிருந்து வெளிப்படும் நகரும் தன்மை கொண்ட இளம்புழுக்கள் இலைகளின் சாற்றினை உறிஞ்சி வளர்கின்றது. நான்கு பருவங்கள் கடந்து கூட்டுப்புழு பருவத்தை அடைந்த பின் முதிர்ந்த ஈக்களாக வெளி வருகிறது. 20 முதல் 30 நாட்களில் வளர்ச்சியடைந்த ஈக்களாக உருவெடுத்து தென்னை ஓலைகளைப் பாதிப்படைய வைத்து அருகில் உள்ள தோப்புகளில் பரவுகிறது. இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு வேப்ப எண்ணெய் 30 மிலி கலந்து தென்னை ஓலைகளின் அடிப்பாகத்தில் தெளிக்கலாம். மேலும் இதில் ஏற்படும் கரும்பூசனத்தை நிவர்த்தி செய்ய மைதா மாவுகரைசலை ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் கலந்து ஓலைகளின் மேல் தெளித்து பெண் ஈக்களை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : South ,
× RELATED இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து...