×

சாப்பாடு இல்லாததால் தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்

கமுதி, டிச.3:  கமுதியில் வாக்குச்சீட்டு எண்ணுமிடத்தில், பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சாப்பாடு இல்லாததால், தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்டனர். கமுதி கே.என்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. இங்கு அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், ஊராட்சி செயலர்கள், காவல் துறையினர் என 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர். காலை 7 மணியில் இருந்தே பணிகள் துவங்கியதால், அதிக வேலைப்பளு காரணமாக சோர்ந்து பணியாளர்கள் மதியம் 2 மணி வரை சாப்பாடு வராததால் ஆத்திரமடைந்தனர். பின்னர் தேர்தல் அதிகாரி ரவியை ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. சிலர் பசி தாங்க முடியாமல், டீ குடித்து சமாளித்தனர். பணியாளர்களுக்கு தகுந்த வசதிகள் செய்து தராததால் ஆத்திரமடைந்தனர். பின்னர் நீண்டநேரத்திற்கு பின் அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு பணிக்கு சென்றனர்.

Tags : Teachers ,election official ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...