×

குமரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றுவது யார்?

நாகர்கோவில்,  ஜன.3 : குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 7 வார்டுகள், ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் 15 வார்டுகள், கிள்ளியூர் ஒன்றியத்தில் 10 வார்டுகள் உள்ளன. குருந்தன்கோடு ஒன்றியத்தில் 11 வார்டுகள், தக்கலை ஒன்றியத்தில் 10 வார்டுகள், திருவட்டார் ஒன்றியத்தில் 12 வார்டுகள், தோவாளை ஒன்றியத்தில் 10 வார்டுகள், முஞ்சிறை ஒன்றியத்தில் 23 வார்டுகள், மேல்புறம் ஒன்றியத்தில் 13 வார்டுகள் உள்ளன.  


தோவாளை
தோவாளை ஒன்றியத்தில் 10 வார்டுகள் உள்ளன. இதில் 1 வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் மேரி ஜாய் 963 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2 வது வார்டில் அதிமுக வேட்பாளர் அய்யப்பன் 1661 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3வது வார்டில், திமுக வேட்பாளர் ஏ.ஆர். பூதலிங்கம் பிள்ளை 1041 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 4 வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஏசுதாஸ் 1650 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 6 வது வார்டில் ராஜேஸ்வரி (திமுக) 1639 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 7 வது வார்டில் மகாராஜ பிள்ளை (அதிமுக) 1496 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மேல்புறம்
மேல்புறம் ஒன்றியத்தில் மொத்தம் 13 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸ் 4 வார்டுகளிலும், பா.ஜ. 3 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட், திமுக தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. 1 வது வார்டில் ஞான சவுந்தரி (காங்கிரஸ்) வெற்றி பெற்றுள்ளார். 2 வது வார்டில் உஷா (திமுக), 3 வது வார்டில் ரதீஸ்குமார் (காங்கிரஸ்), 4 வது வார்டில் டென்னிசன் (இந்திய கம்யூனிஸ்ட்), 5 வது வார்டில் பேபி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), 6 வது வார்டில் ரமணி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) வெற்றி பெற்றுள்ளனர். 7 வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஷீபா ராணியும், 8வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சு பிரியாவும் வெற்றி பெற்றுள்ளனர். 9 வது வார்டு வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 10 வது வார்டில் பா.ஜ. வேட்பாளர் வடிவேல்ராஜ், 11 வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ரவிசங்கர், 12 வது வார்டில் பா.ஜ. வேட்பாளர் நித்யா, 13 வது வார்டில் பா.ஜ. வேட்பாளர் மதன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

அகஸ்தீஸ்வரம்
அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 7 வார்டுகள் உள்ளன. இதில் 1 வது வார்டில் திமுகவை சேர்ந்த அருண்காந்த் வெற்றி பெற்றார். 2 வது வார்டில் அதிமுகவை சேர்ந்த அழகேசனும், 3 வது வார்டில், அதிமுகவை சேர்ந்த சண்முக வடிவும் வெற்றி பெற்றனர். 5 வது வார்டில் ஆரோக்கிய சவுமியா (திமுக) வெற்றி பெற்றார். 6 வது வார்டில் பிரேமலதா (திமுக) வெற்றி பெற்றார். 7 வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் வெற்றி பெற்றார்.
ராஜாக்கமங்கலம்
ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 1 வது வார்டில், திமுகவை சேர்ந்த உமா , 1602 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2 வது வார்டில் பா.ஜ.வை சேர்ந்த மாரிமுத்து 2496 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3 வது வார்டில், அதிமுகவை சேர்ந்த அய்யப்பன் 1348 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 4 வது வார்டு ஜெயா (பா.ஜ.) 1058 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 5 வது வார்டில் பா.ஜ.வை சேர்ந்த ஹேமா 1541 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 6 வது வார்டில் அனு பிரியதர்ஷினி (அதிமுக) 1122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 7 வது வார்டில் தங்கராஜ் (பா.ஜ.) 1299 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 8 வது வார்டு தர்மலிங்கம் உடையார் (பா.ஜ.)1023 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  9வது வார்டு சகிலா (பா.ஜ.) 1439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 10 வது வார்டு சாரதா (அதிமுக)1377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 11வது வார்டு சுனில் (நாம் தமிழர்) 1011 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 12 வார்டு சரவணன் (திமுக) 1134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 13 வது வார்டு மேரி தமிழரசி (அதிமுக) 1670 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 14 வது வார்டு ஹென்றி மினி (சுயே)1454 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 15 வது வார்டு மேரி கேத்ரின் (திமுக)922 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கிள்ளியூர்
கிள்ளியூர் ஒன்றியத்தில் மொத்தம் 10 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸ் அதிகபட்சமாக 6 இடங்களை பிடித்துள்ளது. பாரதிய ஜனதா, அதிமுக தலா ஒரு இடங்களையும், சுயேட்சைகள் 2 இடங்களையும் பிடித்துள்ளனர்.  1 வது வார்டில் மோகன்தாஸ் (பா.ஜ.) வெற்றி பெற்றுள்ளார். 2 வது வார்டில், மேரி கமலாபாய் (அதிமுக) வெற்றி பெற்றார். 3 வது வார்டு மேரி ஸ்டெல்லா (காங்கிரஸ்), 4 வது வார்டு லெனின்குமார் (காங்கிரஸ்), 5 வது வார்டு கிறிஸ்டல் ரமணிபாய் (காங்கிரஸ்), 6 வதுவார்டு குயின்மேரி (காங்கிரஸ்), 7 வது வார்டு காட்வின் (சுயேட்சை), 8வது வார்டு தேவதாஸ் (சுயேட்சை), 9வது வார்டு விஜிலா (காங்கிரஸ்), 10 வது வார்டு விஜயராணி (காங்கிரஸ்) வெற்றி பெற்றுள்ளனர்.
முஞ்சிறை
முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 23 வார்டுகள் உள்ளன. இதில் 1வது வார்டில் பத்மாவதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) வெற்றி பெற்றார். 2வது வார்டில் ரெஜி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) வெற்றி பெற்றுள்ளார். 3 வது வார்டில், கலா (திமுக)  வெற்றி பெற்றார்.  4 வது வார்டில் ராஜேஸ்வரி (சுயே) வெற்றி பெற்றார். 5 வது வார்டில் ரோஸ்மேரி (பா.ஜ.), 6 வது வார்டில் வக்கீல் செவாஸ்கர் (பா.ஜ.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
7வது வார்டில் தாமராட்சி (பா.ஜ.) வெற்றி பெற்றார். 8 வது வார்டில் பாபு (காங்கிரஸ்), 9வது வார்டில் வெஞ்சிலாஸ் (காங்கிரஸ்), 10 வது வார்டில் கிறிஸ்டல்பாய் (காங்கிரஸ்), 11 வது வார்டில் சாந்தினி (காங்கிரஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர். 12 வது வார்டில் சிவகாமினி (பா.ஜ.) வெற்றி பெற்றார். 13வது வார்டில், ஆபிரகாம் தம்பி (திமுக) வெற்றி பெற்றார்.  14 வது வார்டில் சுஜாகுமாரி (பா.ஜ.) வெற்றி பெற்றுள்ளார்.  16 வது வார்டில் ஆகிமோன் (திமுக) வெற்றி பெற்றார்.

தக்கலை
தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் 10 வார்டுகள் உள்ளன. இதில் 1 வது வார்டில் கிறிஸ்டி ஜெகதா (காங்கிரஸ்) 1529 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  2 வது வார்டில் 1381 வாக்குகள் பெற்று அருள் ஆன்றனி (காங்கிரஸ்) வெற்றி பெற்றார். 3 வது வார்டு மனோன்மணி (பா.ஜ.) வெற்றி பெற்றார். 4 வது வார்டு புளோரிஸ் மேரி (காங்கிரஸ்), 5 வது வார்டு கோல்டன் மெல்பா (காங்கிரஸ்), 6 வது வார்டு மனோகரகுமார் (பா.ஜ.) ஆகியோர்  வெற்றி பெற்றுள்ளனர். 7 வது வார்டில் சிவக்குமார் (பா.ஜ.) வெற்றி பெற்றார். 8 வது வார்டில் மவுண்ட் தேன் ரோஜா (திமுக) வெற்றி பெற்றார். 9வது வார்டில் செந்தில்குமார் (பா.ஜ.) வெற்றி பெற்றுள்ளார்.
குருந்தன்கோடு
மொத்த வார்டுகள் 11 ஆகும். 1 வது வார்டில் அனுஷா தேவி (பா.ஜ.) வெற்றி பெற்றார். 2 வது வார்டில் கார்த்திக் (பா.ஜ.), 3 வது வார்டில் சிவந்திக்கனி (பா.ஜ.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.  5 வது வார்டு ஓட்டு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 7 வது வார்டு சிவகாமி (பா.ஜ.) வெற்றி பெற்றார். 8 வது வார்டு எனல்ராஜ் (காங்கிரஸ்) வெற்றி பெற்றார். 9வது வார்டு சகாய வில்சன் (அதிமுக) வெற்றி பெற்றுள்ளார்.

திருவட்டார்
திருவட்டார் ஒன்றியத்தில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 1 வது வார்டில் பீனாகுமாரி (அதிமுக) 805 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2 வது வார்டில் அனிதாகுமாரி (திமுக) 1157 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  3 வது வார்டில் ஷீலாகுமாரி (அதிமுக) 986 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  4 வது வார்டில் ஜெய சோபியா (அதிமுக) 1226 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 5 வது வார்டில், ஜெய (காங்கிரஸ்) 1166 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 6 வது வார்டில், ராம்சிங் (திமுக) 1651 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  7 வது வார்டில் ஜெபா (காங்கிரஸ்) 1185 வாக்குகள் பெற்றார். 8 வது வார்டில் ஷீபா (பாஜக), 9 வது வார்டில் சகாய ஆன்றனி (மார்க்சிஸ்ட்), 10 வது வார்டில் ஜெகநாதன் (திமுக), 11 வது வார்டில் ராஜூ(திமுக), 12 வது வார்டில் பிரேமசுதா(திமுக) ஆகி யோர் வெற்றி பெற்றனர்.
நேற்று இரவு வரை பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. ஒன்றிய வார்டுகளை பொறுத்தவரை திமுக, அதிமுக, பா.ஜ, காங்கிரஸ் கட்சிகள் என மாறி, மாறி வெற்றி பெற்றுள்ளனர். எனவே தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்ற போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மறு வாக்கு எண்ணிக்கையில் பாஜ வெற்றி
அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 7 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 3, அதிமுக 2 வெற்றி பெற்று இருந்தனர். 2 வார்டு முடிவுகள் வர வேண்டி இருந்தது. இந்த நிலையில் இந்த ஒன்றிய 4 வார்டு வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டது. பா.ஜ. வேட்பாளருக்கு சாதகமாக அதிகாரிகள் முடிவை அறிவிக்க தயாரானதாக கூறி, திமுக, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனால் 4 வது வார்டு வாக்கு எண்ணிக்கை முடிந்து நீண்ட நேரமாக முடிவு அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்து இரு தரப்பு வேட்பாளர்களிடமும்  பேச்சு வார்த்தை நடந்தது. பின்னர் மறு வாக்கு எண்ணிக்கை நடந்தது. முடிவில் பா.ஜ வேட்பாளர் 1238 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காங்.வேட்பாளர் ஜெனிதா 1235 வாக்குகள் பெற்றார். 3 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ வெற்றி பெற்றுள்ளது.

மறு வாக்கு எண்ணிக்கை
குருந்தன்கோடு 6 வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் மேரி புஷ்பராணி 908 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் லீனா 906 வாக்குகளும் வாங்கி இருந்தனர். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி என்ற நிலையில், லீனா தரப்பில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரிக்கை வைத்தனர். இந்த வார்டில் ஏற்கனவே 45 வாக்குகள் செல்லாத வாக்குகளாக இருந்தன. அவற்றை மறு பரிசீலனை செய்து சரிபார்த்து மீண்டும் எண்ண வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது.

Tags : Winners ,Panchayat Union Wards ,Kumari District ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...