×

முதலிபாளையத்தில் தொழில்நுட்ப பயிற்சி முகாம்

திருப்பூர், ஜன.3: திருப்பூர் முதலிபாளையம் தொழில்பேட்டை வளாகத்தில் செயல்படும் அடல் இன்குபேஷன் மையத்தில் சார்பில்  ஆயத்த ஆடை உற்பத்திக்கான அதிநவீன நிட்டிங் மெஷின்கள் இம்மையத்தில் நிறுவப்பட்டுள்ளன.புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, புதுமையான ஆடை ரகங்கள், நுாலிழை, ஆடை தயாரிப்பு, சாயமேற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. தொழிலாளர்களின் திறனை வளர்க்கும் விதமாக  இன்குபேஷன் மையம் அதிநவீன நிட்டிங் தொழில் நுட்பங்களை அறிந்துகொள்ளும் வகையில், வரும் 7, 8,9 தேதிகளில் சிறப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. இதில், டில்லி, மும்பை பகுதிகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்று, பல்வேறுவகை நிட்டிங் தொழில் நுட்பங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கின்றனர். இன்குபேஷன் மையத்தில் உள்ள எலக்ட்ரானிக் ஜக்கார்டு, டெனிம் நிட்டிங், இன்டர்லாக், ஷூ போன்ற புதுமையான பொருட்களை உருவாக்கும் பிளாட் நிட்டிங் மெஷின்களை பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளலாம்.

Tags : Training Camp ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்