×

அல்லப்பாளையம், பசூரில் தேர்தல் அதிகாரி முற்றுகை

அன்னூர், ஜன. 3:அன்னூர் ஒன்றியத்தில் அல்லப்பாளையம், பசூர் ஊராட்சியி–்ல தேர்தல் அதிகாரியை தி.மு.க, அதிமுகவினர் முற்றுகையிட்டனர். அன்னூர் கே ஜி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் அல்லபாளையம்  பஞ்சாயத்து திமுக, அதிமுக இரு தரப்பினரிடையே தேர்தல் முடிவில் சலசலப்பு ஏற்பட்டது. இதில் அல்லபாளையத்தை சேர்ந்த அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்ட வெங்கிடுபதி 866 வாக்குகள் பெற்றும் எதிராக போட்டியிட்ட ராமசாமி திமுக கட்சி சார்பில் போட்டியிட்ட ராமசாமி 855 வாக்குகளும் பெற்று 11 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெங்கிடுபதி வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். அதில் தவறு நடந்துள்ளதாக திமுகவினர் தேர்தல் அதிகாரியிடம் கூறி பதிவான வாக்குகளும்,  முடிவில் அறிவித்த உள்ள வாக்குகள் சரியாக வரவில்லை, எனக்கூறி முற்றுகையில் ஈடுபட்டனர். மறு வாக்கு எண்ணிக்கை செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரி குழந்தைசாமியை முற்றுகையிட்டனர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

அதேபோல், பசூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு, அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜமுனாராணி 997 வாக்குகளும், திமுகவை சேர்ந்த வித்யா 1066 வாக்குகளும் பெற்று 164 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவைச் சேர்ந்த வித்யா வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. இதில் ஜமுனாராணி மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.  இதனையடுத்து தேர்தல் அதிகாரியிடம் முறை இடுவதற்காக வந்த திமுகவினர் இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது நாங்கள் பெருவாரியாக வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம் அதனால் இறுதியான முடிவை காலம் தாழ்த்தாமல் இப்பொழுதே அறிவிக்க வேண்டும், எனக்கூறி முற்றுகையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தேர்தல் அதிகாரி வித்யா வெற்றி பெற்றதாக கூறியதையடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர்.

Tags : Allappalayam ,
× RELATED தொழிலாளி, மூதாட்டி கொலை போலீசுக்கு பயந்து வாலிபர், முதியவர் தற்கொலை