×

வாக்கு எண்ணிக்கை மையங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

திருப்பூர்,ஜன.3:திருப்பூரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. அதில் திருப்பூரில் 17 மாவட்ட கவுன்சிலர்கள், 13 ஒன்றியங்களுக்குட்பட்ட 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 கிராம ஊராட்சி தலைவர்கள், 2,295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடந்து முடிந்தது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களின் வாக்குபெட்டிகளை அந்த ஊராட்சிகளில் எண்ணிக்கை மையம் அமைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தின் அனைத்து புறமும் 100 மீட்டருக்கு முன்பு போலீசார் தடுப்பு அமைத்து கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்தனர். மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தின் நுழைவு பகுதியில் மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியோடு வேட்பாளர்கள், பூத் ஏஜெண்டுகள், அலுவலர்கள் ஆகியவர்களை பலத்த சோதனைக்கு உட்படுத்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள்ளும் பல தடுப்புகள் அமைத்து பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை:
திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையமாக ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலை பள்ளியை தேர்வு செய்து அந்த பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் திடீரென மோப்ப நாய் ராபட் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு சோதனை நடத்தினர். அதே போல் அந்த பள்ளியில் 4 உதவி கமிஷனர்கள், மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 260க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதே மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : polling centers ,
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...