×

குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்

அவிநாசி, ஜன.3: திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சி மன்ற 1வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 94 வாக்குகளில் பொன்னுசாமி என்பவர் 47 வாக்குகளும், அங்கப்பன் என்பவர் 47 வாக்குகளும் சரிசமாக பெற்றிருந்தனர். இதையடுத்து அவிநாசி தேர்தல் நடத்தும் அலுவலர் ஹரிகரன் முன்னிலையில் வேட்பாளர்கள் அனுமதியுடன் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொன்னுசாமி, அங்கப்பன் ஆகிய இருவரது பெயர்களும் சீட்டில் எழுதி போடப்பட்டு குலுக்கல் நடந்தது. இதில் அங்கப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Tags : congress leader ,
× RELATED ‘நீ தேங்கா பீஸு, நீ பூட்டு கேஸு’ மபி...