×

ஊட்டி வாக்கு எண்ணும் மையத்தில் தேநீர் கிடைக்காமல் அரசு ஊழியர்கள் அவதி

ஊட்டி, ஜன. 3: ஊட்டி பாலிடெக்னிக்கில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தேநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். நீலகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டமாக கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணும் பணி நடந்தது. மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள அரசு பாலிக்டெக்னிக் கல்லூரியில் நடந்தது. இங்கு வாக்கு எண்ணும் பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 300 பேர் ஈடுபட்டனர். பொதுவாக வாக்கு எண்ணும் மையங்களில் அடிப்படை வசதிகள், உணவு மற்றும் தேநீர் ஆகியவை ஏற்பாடு செய்யப்படும்.

ஆனால், ஊட்டி அரசினர் பாலிடெக்னிக் மையத்தில் இம்முறை தேர்தல் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை. தேநீர் கூட முறையாக விநியோகிக்கப்படவில்லை. இதனால், தேநீருக்காக ஊழியர்கள் அங்குமிங்கும் அலைகழிக்கப்பட்டனர். மேலும் உணவும் குறித்த நேரத்திற்கு வராத நிலையில் ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டனர். தேர்தல் சமயங்களில் நிருபர்களுக்கு தனி அறை அமைக்கப்பட்டு உடனுக்குடன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். முடிவுகளை உடனடியாக தெரிவிக்கும் வகையில் பத்தரிக்கையாளர்கள் அறையில் இணையதள வசதி ஏற்படுத்தப்படும். ஆனால், இம்முறை நிருபர்களுக்கு தனி அறை ஒதுக்கவில்லை. இதனால், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் நிருபர்கள் அவதிக்குள்ளாகினர்.

Tags : servants ,polling center ,Ooty ,
× RELATED சென்னையில் தபால் வாக்குப்பதிவு...