×

கோவை அருகே கோஷ்டி மோதல்; 4 பேர் காயம்

கோவை, ஜன.3: கோவை அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அன்னூர் அடுத்த மூக்கனூரில் முன் விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரு கோஷ்டிகளிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் இரு கோஷ்டியை சேர்ந்த செல்வராஜ் மனைவி ராதாமணி(40), சவுண்டப்பன் (65), ருக்மணி, பத்மா ஆகியோர் காயமடைந்தனர். 4 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் அசோக்குமார், ராகவன், ருக்மணி, சவுண்டப்பன், விஷ்ணு, செல்வராஜ், ராதாமணி, லோகேஸ்வரன் உள்பட 10 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் அன்னூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Coalition clash ,Goa ,
× RELATED மோடி வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல்: கோவையில் பரபரப்பு