×

அமுதசுரபி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்

புதுச்சேரி, ஜன. 3: 5 மாதம் சம்பளம் வழங்காததால் அமுதசுரபி ஊழியர்கள் நேற்று திடீரென பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்ேசரியில் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபி சார்பில் மளிகை, பெட்ரோல் பங்க், மதுபார் உள்ளிட்ட விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. அரசு துறை அலுவலகங்களுக்கு எழுதுபொருட்கள் உள்ளிட்டவை அமுதசுரபி மூலம் வழங்கப்படுகிறது. ஆனால், இதற்கான பணத்தை அமுதசுரபிக்கு அரசு துறைகள் முறையாக செலுத்தவில்லை. இதுவரை ரூ.இரண்டரை கோடி அளவுக்கு அமுதசுரபிக்கு அரசு துறைகள் நிலுவைத்தொகை செலுத்த வேண்டியுள்ளது.
இதனால் அமுதசுரபிக்கு பொருட்கள் கொள்முதல் செய்வது, ஊழியர்களுக்கு சம்பளம்., போனஸ் வழங்குவது தடைபட்டுள்ளது. இதுபற்றி ஊழியர்கள், அமுதசுரபி மேலாண் இயக்குநரிடம் எடுத்துக் கூறினர். இதனால் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு அரசு துறைகளுக்கு பொருட்களை விநியோகம் செய்வது இல்லை என அப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன்பிறகும் அரசு துறைகளுக்கு பொருட்கள் வழங்கப்படாததால் ஊழியர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

5 மாத சம்பளம், அரசு துறைகளின் பாக்கி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள அமுதசுரபி தலைமை அலுவலகத்தில் பணிகளை புறக்கணித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற பகுதிகளில் உள்ள அமுதசுரபி கடைகளையும் மூடி அங்கிருந்த ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களிடம் அமுதசுரபி மேலாண் இயக்குநர் ஜோதிராசு பேச்சுவார்த்தை நடத்தினார். 2 நாளில் முதல்வர் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சரை சந்தித்து இதுபற்றி பேச ஏற்பாடு செய்வதாக மேலாண் இயக்குநர் உறுதியளித்தார். இதனை ஏற்று ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

Tags : strike ,ambulance staff ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து