×

திமுக வேட்பாளர் வெற்றி

கடலூர், ஜன. 3: கடலூர் ஒன்றிய வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு மற்றும் முகவர்களுக்கு உணவு வழங்காததை கண்டித்து ஆட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையம் கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறுகிறது.இந்நிலையில் மாவட்டம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை பணியில் சுமார் 6 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். கடலூர் ஒன்றிய தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சுமார் 400 பேர் உள்ளனர்.
நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் பணியிலிருந்த அலுவலர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு உள்ளிட்ட உணவுகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. உணவு ஏற்பாடுகள் சரிவர செய்யப்படாமல் இருந்த்தால் வாக்கு எண்ணிக்கையில் இருந்த பல அலுவலர்கள் செய்வதறியாமல் தவித்தனர்.

மேலும் தங்களுக்கு அடிப்படை தேவையான உணவு, குடிநீர் கூட வழங்கப்படவில்லை என சம்பந்தப்பட்ட ஒன்றிய தேர்தல் நடத்தும் தரப்பினரிடம் கேள்வி எழுப்பினர்.  உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் வாக்கு எண்ணிக்கை அறையில் இருந்த அலுவலர்கள் வெளியேற தொடங்கியதால் வாக்கு எண்ணிக்கையும் பாதிக்கப்படும் சூழல் உண்டானது.இதற்கிடையே பிற்பகல் 2.30 மணி அளவில் ஆய்வு பணிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வாக்கு எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். அப்போது அலுவலர்கள் பலர் ஆட்சியரை முற்றுகையிட்டு தங்களுக்கு உணவு கூட முறையாக வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக உணவுக்கு ஆட்சியர் ஏற்பாடு செய்தார். இந்நிலையில் 3.15 மணிக்கு உண ரவழைக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்றது. உணவு வழங்கும் போது முகவர்களும், வேட்பாளர்கள் தரப்பினரும் தங்களுக்கும் வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடலூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : DMK ,candidate ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்