×

பொள்ளாச்சி தெற்கு திமுக வசமாகிறது ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்தல்

கோவை, ஜன.3: கோவை மாவட்டத்தில் ஆனைமலை, அன்னூர், காரமடை, கிணத்துக்கடவு, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, எஸ்.எஸ் குளம், சுல்தான்பேட்டை, சூலூர், தொண்டாமுத்தூர் ஒன்றியங்களில் 17 மாவட்ட உறுப்பினர்கள், 155 ஒன்றிய உறுப்பினர்கள், 228 ஊராட்சி தலைவர்கள், 2,034 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் நடந்தது. நேற்று 12 ஒன்றியங்களில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் ஒன்றியம் வாரியாக வெற்றி பெற்றவர்கள்  விவரம் வருமாறு:-
மதுக்கரை
மதுக்கரை ஊராட்சி ஒன்றியம்  1வது வார்டில் உதயகுமாரி (அதிமுக), 2வது வார்டில் தனலட்சுமி (அதிமுக)
3வது வார்டில்  மாசிலாமணி  (திமுக), 4வது வார்டில் பிரகாஷ் (திமுக), 5வது வார்டு  ராமலிங்கம் (திமுக), 6வது வார்டில் பிரபாவதி (அதிமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர். மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 6 வார்டுகள்
உள்ளன.

இதில் 3 வார்டுகளில் அதிமுகவும், 3 வார்டுகளில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. எனவே மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் யார்? என்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி தெற்கு
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் 1வது  வார்டில் அதிமுக வேட்பாளர் காந்திமதி, 2வது வார்டில் திமுக வேட்பாளர்  ஜோதிபாசு, 3வது வார்டில் திமுக வேட்பாளர் மகேஸ்வரி, 4 வது வார்டில் அதிமுக  வேட்பாளர் ராஜேஸ்வரி, 5வது வார்டில் திமுக வேட்பாளர் மோகனா, 6 வது  வார்டில் அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார், 7 வது வார்டில் திமுக வேட்பாளர்  பாலகணேஷ், 8வது வார்டில் அதிமுக வேட்பாளர் கோமதி, 9 வது வார்டில் திமுக  வேட்பாளர் சண்முகசுந்தரம், 10வது வார்டில் திமுக வேட்பாளர் யுவராஜ், 11வது  வார்டில் அதிமுக வேட்பாளர் லட்சுமி, 12வது வார்டில் திமுக வேட்பாளர்  ருக்மணி, 13வது வார்டில் திமுக வேட்பாளர் சித்ரா
ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பொள்ளாச்சி  தெற்கு ஒன்றியத்தில் மொத்தமுள்ள 13 வார்டுகளில் திமுக 8 வார்டுகளில்  வெற்றி பெற்றுள்ளதால் இந்த ஒன்றியத்தை திமுக கைப்பற்றுகிறது.

அன்னூர்
அன்னூர்   ஒன்றியம் 1வது வார்டில் அதிமுகவை சேர்ந்த பழனிச்சாமி, 2வது வார்டில்  அதிமுக  வேட்பாளர் சின்னான், 3வது வார்டில் திமுக வேட்பாளர் உமாவதி, 4வது  வார்டில்  அதிமுக வேட்பாளர் திலகவதி, 5வது வார்டில் சுயேட்சை வேட்பாளர்  லோகநாயகி  ஆகியோர் வெற்றி பெற்றனர்.
காரமடை
காரமடை ஒன்றியம் 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் யசோதா, 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் சரிதா, 3வது வார்டில் திமுக வேட்பாளர் ரவி, 7வது வார்டில் அதிமுக வேட்பாளர் மணிமேகலை வெற்றி ெபற்றனர்.

தொண்டாமுத்தூர்
தொண்டாமுத்தூர் ஒன்றியம் 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் கார்த்திகா, 3வது வார்டில் அதிமுக கவுன்சிலர் சித்ரா வெற்றி பெற்றனர்.
சூலூர்
சூலூர் ஒன்றியம் 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் மகேஸ்வரி, 3வது வார்டில் திமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் சுரேந்திர மோகன் ஆகியோர் வெற்றி ெபற்றனர்.
சுல்தான்பேட்டை
சுல்தான் பேட்டை ஒன்றியம் 1வது வார்டில் திமுக வேட்பாளர் விஜயகுமார், 5வது வார்டில் அதிமுக வேட்பாளர் லதாமணி ரங்கநாதன், 6வது வார்டில் திமுக வேட்பாளர் ரங்கசாமி ஆகியோர் வெற்றி ெபற்றனர்

Tags : Pollachi South DMK ,panchayat union members election ,
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்