×

மருதமலையில் தொடரும் யானை நடமாட்டம்

கோவை, ஜன.3: கோவை மருதமலை கோயில் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக ஒற்றை யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது. வனத்தில் இருந்து வெளியேறும் யானை கோயில் படிக்கட்டு வழியாக மீண்டும் வனத்திற்குள் செல்கிறது. இந்த யானை மருதமலை, நரசிபுரம், ஆனைமடுவு பகுதிகளில் சுற்றி வருகிறது. இந்நிலையில், புத்தாண்டு நள்ளிரவு மருதமலை கோயில் அருகே யானை நடமாட்டம் இருந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

வனத்திற்குள் சென்ற யானை நேற்று முன்தினம் மதியம் மருதமலை கோயில் படிக்கட்டிற்கு வந்தது. அப்போது, பொதுமக்கள் அதிகளவில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை மீண்டும் வனத்திற்குள் விரட்டியடித்தனர். இந்நிலையில், யானை நடமாட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து ரோந்து பணியை மேற்கொண்டனர். யானை நடமாட்டம் குறித்த தகவலறிந்த வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். இரவு நேரத்தில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் உதவியுடன் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Marathamalai ,
× RELATED மருதமலை, பேரூர் கோயில்களின் வெப்சைட் முடக்கம்