×

குறுந்தொழில்களை பாதுகாக்க ஜி.எஸ்.டி. வரி விலக்கு ேவண்டும்

கோவை, ஜன. 3: குறுந்தொழில்களை பாதுகாக்க ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்க வேண்டும் என ‘காட்மா’ வலியுறுத்தியுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சிவக்குமார், பொதுச்செயலாளர்  செல்வராஜ், பொருளாளர்  நடராஜன் ஆகியோர் மத்திய ஜி.எஸ்.டி.  மற்றும் கலால் வரித்துறை முதன்மை  ஆணையர் ராஜேஷ் சோதியிடம் அளித்துள்ள மனு: நாடு முழுவதும் கடந்த 1.7.2017 முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில்,  குறுந்தொழில் கூடங்களின் ஜாப் ஆர்டர்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது.  கடும் தொழில் நெருக்கடி காரணமாக, இதை குறைக்க வேண்டும் என காட்மா உள்பட பல்வேறு குறுந்தொழில்  சங்கங்கள் கோரிக்கை விடுத்து போராட்டங்கள் நடத்தின.

இதன்பின்னர் மத்திய அரசு, கடந்த 20.09.2019 அன்று, குறுந்தொழில் ஜாப் ஆடர்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதமாக  குறைக்கப்படும் என அறிவித்தது. ஆனால், அமல்படுத்தவில்லை. பொருளாதார மந்தநிலை மற்றும் நிதி  நெருக்கடி ஆகிய காரணங்களை கூறி, குறுந்தொழில் முனைவோருக்கு ஆர்டர் கொடுக்கும்  பெரிய நிறுவனங்கள், நாங்கள் செய்துகொடுத்த வேலைகளுக்கான பில் தொகையை கொடுப்பதற்கு  120 முதல் 150 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொள்கிறார்கள். இதனால்  குறுந்தொழில்முனைவோர் ஜி.எஸ்.டி. தொகையை செலுத்த காலதாமதம் ஆகிறது. இதன் காரணமாக, கடும் சிறு, குறு தொழில்  நிறுவனங்கள் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ேமற்கொண்டு தொழிலை செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, குறுந்தொழில்களை காப்பாற்ற ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்க வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Tags :
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்