×

உலக அமைதி தின வேள்வி

ஈரோடு, ஜன.3: உலக சமுதாய சேவா சங்கம், ஈரோடு மனவளக்கலை மன்றம் சார்பில் ஈரோடு அறிவுத்திருக்கோயிலில் உலக அமைதி தின வேள்வி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு உலக சமுதாய சேவா சங்கத்தலைவர் மயிலானந்தன் தலைமை தாங்கி வேள்வியைத் துவக்கி வைத்து பேசுகையில்,`இந்தப் புத்தாண்டில் நாம் அனைவரும் பிறரைப்பற்றி சிந்திக்காமல் நம்மைப்பற்றி சிந்தித்து, நமது குறைகளை கவனித்து நம் ஒழுக்கத்தை நல்ஒழுக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நாம் யாரையும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் வினைப்பயன், இறையருள் காரணமாக வாழ்க்கை அமைந்துள்ளது. நமது வாழ்க்கைக்கு நாமே பொறுப்பு என்பதை உணர வேண்டும். பிறரிடம் உள்ள குறைகளை பெரிதுபடுத்தாமல் அவர்களை அவர்களது குறைகளுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்வது மட்டுமின்றி அவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும். பொறாமை, கோபம், பேராசை போன்ற குணங்களை தவிர்த்து அன்பு, கருணை, சேவை, தியாகம் போன்ற நற்குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதையே சபதமாக எடுத்து செயல்படுத்துவோம்’ என்றார். இதைத்தொடர்ந்து முதுநிலை பேராசிரியர் எம்.சதாசிவம் வேள்வியை நிறைவு செய்து தனிமனித அமைதி மூலம் உலக அமைதி குறித்து பேசினார். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : World Peace Day ,
× RELATED ஜி.கே.மணி உலக அமைதி நாள் வாழ்த்து