×

சுற்றுச்சுவர் இல்லாததால் அரசு ஆரம்பப் பள்ளியில் ஆடு, மாடுகள் தஞ்சம்

வாலாஜாபாத், ஜன.3: வாலாஜாபாத் பேரூராட்சி வல்லபாக்கம் பகுதியில் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதே பகுதியில் அங்கன்வாடி மையம், ஒன்றிய ஆரம்பப் பள்ளி, நூலகம், ரேஷன் கடை உள்பட பல்வேறு அரசு நிறுவனங்கள்  உள்ளன. இதே பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  வேளாளர் தெருவில் உள்ள ஆரம்பப் பள்ளியில் படிக்கின்றனர். இந்த ஆரம்பப் பள்ளிக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை கட்டிடம், சமையலறை உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆரம்பப் பள்ளி வளாகத்தை சுற்றி நிழல் தரும் மரங்களும் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த ஆரம்பப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இதுவரை அமைக்கவில்லை. இதனால் ஆடுகள், மாடுகள் பள்ளி வளாகத்தில் தஞ்சம் அடைகின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள் நடந்து செல்லும்போது, மாடுகள் அவர்களை முட்டுவதற்காக ஓடுகின்றன. இதையொட்டி அவர்கள் கடும் அவதியடைகின்றனர்.
மேலும், பள்ளி வளாக முழுவதும் செடி கொடிகள் வளர்ந்து முட்புதர்களாக உள்ளது. இதனால் இங்கு, மாணவர்கள் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலை உள்ளது. இதையொட்டி பொதுமக்கள், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமடைந்துள்ளனர்.எனவே எம்எல்ஏ, எம்பி நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : primary school ,government ,
× RELATED மாதிரி வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு வரவேற்பு