×

எதிர்ப்பை மீறி தொடங்கப்பட்ட கல்குவாரியால் கிராமத்தை விட்டு மக்கள் வெளியேறும் அவல நிலை: முதல்வர், ஜனாதிபதிக்கு புகார் மனு

உத்திரமேரூர், ஜன.3: உத்திரமேரூர் அருகே கிராம மக்கள் எதிர்ப்பை மீறி துவங்கப்பட்டுள்ள கல்குவாரியால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதனால் கிராம மக்கள் கல்குவாரிக்கு தடைவிதிக்க கோரி முதல்வர், ஜனாதிபதிக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். இல்லாவிட்டால், கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. உத்திரமேரூர் அடுத்த பழவேறி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பல்வேறு தனியார் கல்குவாரிகள் இயங்குகின்றன. இந்த கல்குவாரிகள் அருகே கல்அரவை தொழிச்சாலைகளும் செயல்படுகின்றன. குவாரிகளில் பூமியில் இருந்து கற்கள் பெயர்த்தெடுக்க தினமும் சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் பயன்படுத்தபடுகின்றன. இதனால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிர்வு ஏற்பட்டு, கிராமங்களில் உள்ள வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்படுகிறது.

இதுமட்டுமின்றி கல்குவாரி லாரிகளால் கிராம சாலைகள் பழுதாகின்றன. இதனால்  போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இந்த சாலையில் கிராம மக்கள் செல்லும்போது, பழுதான சாலையில் விபத்து ஏற்பட்டு உயிர் சேதமும் ஏற்படுகிறது. அதேபோல், கல் அரவை தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகைகளால் கிராம மக்களுக்கு சுவாசக் கோளாறு, கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதுடன் விவசாயிகள் பயிரிடும் பயிர்களில் புகை படிந்து பயிர்கள் வளராமல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.இந்த கல்குவாரிகளில் சுமார் 500 அடிக்கு மேல் ஆழமாக தோண்டுவதால் கிராம புறங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து குடிநீர் பற்றாக்குறை தொடர் கதையாகிவிட்டது. இதுபோல் கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இயற்கை வளங்கள் அழிகிறது.

Tags : evacuation ,village ,Kalkwari ,President ,CM ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...