×

மதுராந்தகம் சுற்று வட்டார பகுதிகளில் காலை 8 மணிவரை கடும் பனிப்பொழிவு: குளிரில் நடுங்கிய பொதுமக்கள்

மதுராந்தகம், ஜன. 3: மதுராந்தகம் நகரில் கடந்த சில நாட்களாக அடிக்கடி லேசான சாரல் மழையும், வானம் மேகமூட்டத்துடனும் எப்போதும், மழை வந்துவிடும் என்ற தோற்றத்துடனேயே காணப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து கடந்த 31ம் தேதி இரவு முதல் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. வீடுகளில் தண்ணீர் புகுந்து, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவாக காணப்பட்டது. காலை 6 மணிவரை இயல்பாக காணப்பட்ட இந்த பகுதிகளில், சுமார் 8 மணிவரையில் அடர்த்தியான பனிப்பொழிவு இருந்தது.

மதுராந்தகத்தை ஒட்டிய சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் பனிப்பொழிவு காரணமாக எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத காரணத்தால் மிகவும் மெதுவாகவும் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே ஊர்ந்து சென்றன.இந்த பனிப்பொழிவினை கண்ட மக்கள் அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டால் அதன் பிறகு மழை இருக்காது என்பது காலம் காலமாக நிலவும் கருத்தை கொண்டு இனிமேல் காலையில் எவ்வளவு பனி பொழிகிறதோ அந்த அளவுக்கு கடுமையான வெயிலும் தொடரும், இனி மழைக்கான வாய்ப்பு மிக மிக குறைவு என பேசிக்கொண்டனர்.இதற்கிடையில், அதிகாலையில் தனியார் மற்றும் அரசு நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள் உள்பட பலரும் மின்சார ரயில் மற்றும் பஸ்கள் மூலம் பணிக்கு செல்ல முடியாமல் கடும் பணியால் குளிரில் நடுங்கியபடி சென்றனர்.

Tags : area ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு