×

பாகிஸ்தான் அமைப்புடன் கோலம் போட்ட பெண் தொடர்பு

குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து கடந்த 29ம் தேதி பெசன்ட் நகரில் வீடுகள் முன்பு கோலம் போட்டு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சாஸ்திரி நகர் போலீசார் கோலம் போட்டதாக திருவான்மியூரை சேர்ந்த காயத்ரி கந்தாதே (32), திருவான்மியூரை சேர்ந்த ஆர்த்தி (32), கல்யாணி (23), பிரகதி (28), பவித்ரா ராமானுஜம் (31) உட்பட 8 பேர் மீது ஐபிசி 143, 188 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் சிறிது நேரத்தில் விடுவித்தனர்.

இதுகுறித்து கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், ‘‘கோலம் போட்ட பெண்களை போலீசார் கைது செய்யவில்லை. அடுத்தவர் வீட்டின் முன்பு ஏற்கனவே போடப்பட்ட கோலத்தின் அருகே குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து கோலம் போட்டதால் சம்பந்தப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கோலம் போட்ட பெண்கள் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் தான் போலீசார் அவர்களை கைது செய்தது. இதுதொடர்பாக எங்களிடம் வீடியோ ஒன்றும் உள்ளது. கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரான காயத்ரி கந்தாதே, பாகிஸ்தான் பத்திரிகையாளர் அமைப்பில் உறுப்பினராக உள்ளார். இவர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பல அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதால் நாங்கள் அது குறித்து விரிவாக விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.

Tags : Colombian ,organization ,Pakistani ,
× RELATED இந்திய தேசிய வருமானத்தில் நிலவும்...