கஞ்சா விற்ற 3 பேர் கைது

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக நேற்று முன்தினம் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை ஆணையர் சுப்புலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் புதுவண்ணாரப்பேட்டை, பெரியார் பூங்கா மற்றும் காசிமேடு சிக்னல் பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.அப்போது பூங்கா அருகே சந்ேதக நிலையில் நின்றிருந்த ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் புதுவண்ணாரப்பேட்டை, டிஎச் ரோடு, ஏ.இ.கோயில் தெருவை சேர்ந்த நாகராஜ் (53) என்பதும் கஞ்சா வியாபாரி என்பதும் தெரிய வந்தது.

அதேபோல் காசிமேடு சிக்னல் அருகே சந்தேகப்படும்படி சுற்றிய காசிமேடு, சிங்காரவேலர் தெருவை சேர்ந்த வினோத் (22), காசிபுரம் ஏ பிளாக்கை சேர்ந்த சரண்ராஜ் (25) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தபோது ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக கடத்தி வந்து, இப்பகுதிகளில் பொட்டலங்களாக சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து புதுவண்ணாரப்பேட்டை, காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ₹1,500 ரொக்கம், ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED செங்குன்றம் மற்றும் புழல்...