×

பிரச்னைக்குரிய இடம் பத்திரப்பதிவு சார்-பதிவாளர் சஸ்பெண்ட்

சென்னை: திருப்பதி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர்  கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் தனியார் மெடிக்கல் கல்லூரி இயங்கி வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பல்வேறு புகார் வந்ததையடுத்து இந்த மெடிக்கல் கல்லூரிக்கு அரசு சீல் வைத்தது.  இந்நிலையில், இக்கல்லூரி கட்டிடங்களுடன் கூடிய 50 ஏக்கர் நிலத்தை, இதன் உரிமையாளர் அவருடைய வாரிசுகள் பெயர்களில் கடந்த 29ம் தேதி திருத்தணி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்புதிவு செய்துள்ளார்.  இந்த நிலத்தின் ஒரு ஏக்கர் மதிப்பு தற்போதைய மார்க்கெட் கணக்குப்படி ரூ.24 லட்சம். ஆனால் திருத்தணி சார்பதிவாளர் அந்த இடத்தின் மதிப்பு ரூ.11 கோடியே 19 லட்சம் என நிலத்தின் வழிகாட்டி மதிப்பை பல நூறு மடங்கு உயர்த்தி கடந்த 29ம் தேதி பத்திரப் பதிவு செய்துள்ளார்.

இந்தநிலையில், தற்போது இந்த இடம் வங்கிக்கடன் மற்றும் அமலாக்கத்துறை விசாரணையில் இருப்பதாக கூறப்படுகிறது.  இந்த நிலம் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்திருப்பது பற்றி பத்திரப்பதிவு துறை தலைவருக்கு தெரியவந்தது.  அதன் பின்னர் நடந்த விசாரணைக்கு பிறகு, பத்திர பதிவுத்துறை தலைவர்,   திருத்தணி சார்பதிவாளர் செல்வகுமாரை நேற்று முன்தினம் தற்காலிகமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : Securities Registrar Sgt ,
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100