×

சம்பளத்தில் பிடித்தம் செய்ததை கண்டித்து அயனாவரம் பணிமனை ஊழியர்கள் போராட்டம்: 2 மணி நேரம் சேவை பாதிப்பு

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) சார்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு, டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் என பல்வேறு தரப்பினர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம்தோறும் 30ம் தேதி சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் சம்பளம் வழங்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. இந்நிலையில், அயனாவரம் பணிமனையை சேர்ந்த டிரைவர், கண்டக்டர்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு முழு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.  இதற்கு ஊழியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததோடு,   நேற்று அதிகாலை திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த அதிகாரிகள், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை  எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் பணிக்கு திரும்பினர். ஊழியர்களின் திடீர் போராட்டம் காரணமாக, சுமார் 2 மணி நேரம் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது.

Tags : Ayanavaram Workshop ,
× RELATED தூய்மை பணியாளர்கள் போராட்டம்