×

அனைத்து ரயில் நிலையங்களிலும் கழிப்பறை அமைக்க வேண்டும்: தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்

சென்னை: அனைத்து ரயில் நிலையங்களிலும் கழிப்பறை அமைக்க வேண்டும், என மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் மனு அளித்துள்ளார்.மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் நேற்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் பொது மேலாளர் ஜான்தாமசை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்து பேசியுள்ளேன்.ரயில் விபத்துகள், தற்கொலைகளில் உயிரிழந்த உடல்களை மீட்கும் பணியை தனது வறுமை சூழலிலும் 30 ஆண்டுகளாக செய்து வரும் முருகனை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நேரில் வரவழைத்து சந்தித்தார். இதையடுத்து, முருகனுக்கு அரசு பணி கிடைக்க உதவி செய்யுமாறு என்னிடம் வலியுறுத்தினார். இதுபற்றி தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

எனது தொகுதி மற்றும் வேலூர் தொகுதியில் உள்ள ரயில்வே பாலங்கள் பழுதாகி உள்ளன. அதை சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன்.அதேபோன்று, அனைத்து ரயில் நிலையங்களிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டம் என்று சொல்லி வரும் நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில ரயில் நிலையங்களில் கழிப்பறை வசதி இல்லை என்பது மிக வருத்தமாக இருக்கிறது. எனவே, வரும் நிதி ஆண்டில் கண்டிப்பாக கூடுதல் நிதியை ஒதுக்கி, அனைத்து ரயில் நிலையங்களிலும் கழிப்பறை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை வேண்டும், என வலியுறுத்தி உள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மேலாளர் உறுதி அளித்தள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த சந்திப்பின்போது வேலூர் திமுக எம்பி கதிர்ஆனந்த் மற்றும் சேகர்பாபு எம்எல்ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Dayanidhi Maran ,railway stations ,general manager ,Southern Railway ,
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...