×

திருமயம் அருகே 106 வயது முதியவர் ஆர்வமுடன் வாக்குப்பதிவு

திருமயம், டிச.31: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு அரிமளம், திருமயம் ஒன்றியத்தின் நேற்று நடைபெற்றது. இதில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தனது வாக்குகளை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் திருமயம் அருகே உள்ள ராயவரத்தைச் சேர்ந்த திருமயம் சட்டமன்ற தொகுதியின் மூத்த வாக்காளராக கருதப்படும் 106 வயதுடைய பழனியப்ப செட்டியார் தனது வாக்கை நேற்று காலை அங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பதிவு செய்தார். இவர் நாடு சுதந்திரமடைந்த பின்னர் நடைபெற்ற அனைத்து பொதுத் தேர்தல்களிலும் வாக்கு அளித்துள்ள நிலையில் இதுவரை வாக்குக்காக எந்த ஒரு அரசியல் கட்சியிடமும் பணம், பொருள் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் திருமயம் பாப்பாவயல் பகுதியைச் சேர்ந்த 104 வயதுடைய சுப்பன் தனது வாக்கை திருமயம் அரசு பள்ளியில் பதிவு செய்தார்.

Tags : Thirumayam ,
× RELATED திருமயம் அருகே டிரைவருக்கு திடீர் வலிப்பு பஸ் மரத்தில் மோதி நின்றது