புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு

புதுக்கோடடை, டிச.31: ஊரக உள்ளாட்சி இரண்டாம் கட்ட தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமையப்பெற்றுள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் வாக்குப்பதிவினை மாவட்ட தேர்தல்; அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இரண்டாம்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, மணமேல்குடி, திருமயம் மற்றும் திருவரங்கும் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாக்குச் சாவடிகளை தொடர்ந்து கண்காணித்து அமையப்பெற்றுள்ள பாதுகாப்பு, வாக்குப்பதிவு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை உடனுக்குடன் தேர்தல் ஆணையத்திற்கு தகவலாக அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.

Tags : Inspection ,Election Officers ,Polling Stations ,Pudukkottai District ,
× RELATED வாகனஓட்டிகள் கோரிக்கை பெருநாவலூர்...