×

உற்சாகத்துடன் வாக்களித்த மக்கள் அடையாள அட்டை பூத் சிலிப் இருந்தும் வாக்களிக்க முடியவில்லை

ஜெயங்கொண்டம், டிச. 31: ஆண்டிமடம் அருகே அடையாள அட்டை, பூத் சிலிப் இருந்தும் வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கவரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மணக்கொல்லை, தஞ்சாவூரான் சாவடி, கவரபாளையம் ஆகிய பகுதிகளில் 1,776 வாக்காளர்களுக்கு வருவாய்த்துறை மூலம் படத்துடன் கூடிய பூத் ஸ்லிப் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்து கொண்டிருந்தனர். மதியம் 2 மணிக்கு மேல் சில வாக்காளர்கள் வாக்களிக்க சென்றனர். அப்போது உங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டிருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதற்கு எங்களிடம் பூத் ஸ்லிப், அடையாள அட்டை உள்ளது. அதனால் எப்படி பெயரை நீக்கலாம் என வாக்களிக்க முடியாத 48 வாக்காளர்களும் ஒன்று சேர்ந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வாக்களிக்கும் நேரம் 5 மணியுடன் முடிவடைந்ததால் அனைவரையும் போலீசார் வெளியேற்றினர் இதனால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வாக்காளர்கள் திரும்பினர். இதுகுறித்து வாக்காளர்கள் கூறுகையில், வாக்காளர் பட்டியலில் பெரிய குளறுபடி நடந்துள்ளது. 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிக்காமல் இருக்கக்கூடாது என்று விழிப்புணர்வு பிரசாரங்களை அரசு செய்து வந்தது. இப்போது எங்களுக்கு எப்படி பூத் ஸ்லிப் வழங்கினர். வாக்குச்சாவடி மையத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறாத காரணம் தெரியவில்லை என்றனர்.

Tags : Booth Chile ,
× RELATED வாக்கு பெட்டிக்குள் கிடந்த பூத்...