×

இந்தியா வல்லரசாக வலியுறுத்தி டெல்லிக்கு கோவில்பட்டி சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம்

கொள்ளிடம், டிச.31: இந்தியா வல்லரசாக வலியுறுத்தி, கோவில்பட்டியிலிருந்து டெல்லிக்கு செல்லும் சமூக ஆர்வலருக்கு கொள்ளிடத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜபரணிதரன் (42). இவர் இந்தியா வல்லரசாக வலியுறுத்தி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தன்று (ஜூலை 28ம்தேதி) கோவில்பட்டியிலிருந்து டெல்லிக்கு சைக்கிள் பயணத்தை தொடங்கினார். திருச்சி வந்த அவர் தொடர்மழை காரணமாக செப்டம்பர், அக்டோபர் 2 மாதங்களாக தனது பயணத்தை தற்காலிகமாக நிறுத்தினார். மீண்டும் தனது பயணத்தை நவம்பர் மாதம் 2ம் தேதியன்று மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழாவையொட்டி தஞ்சையிலிருந்து சைக்கிள் பயணத்தை துவங்கினார். இயற்கை சித்தா உணவுமுறை குழந்தை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் நீச்சல் பயிற்சியாளர் நியமிக்கப்படவேண்டும். இந்தியாவின் தலைநகர் டெல்லி என்பதை மாற்றி நாக்பூரை தலைநகராக அறிவிக்க வேண்டும். புதிய தலைநகருக்கு ஜெய்ஹிந்த் சிட்டி என்று என்று பெயர் வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி வழியாக நேற்றுமுன்தினம் கொள்ளிடம் வந்தார். அப்போது சமூக ஆர்வலர் ராஜபரணிதரனுக்கு, கொள்ளிடத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கொள்ளிடம் சமூகசேவகர் பிரபு, சமுகஆர்வலர் காமராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் லெட்சுமணன், ஒன்றிய தி.க தலைவர் பாண்டுரங்கன் மற்றும் பலர் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Kovilpatti ,cyclists ,Delhi ,India ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!