×

சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு கொள்ளிடம் அருகே கூழையாறில்

கொள்ளிடம், டிச.31: கொள்ளிடம் அருகே கூழையாறு வாக்கு சாவடியில் மறுவாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் 20 வது வார்டு உறுப்பினருக்கு அதிமுக கூட்டணி சார்பில் ஜலபதி முரசு சின்னத்திலும், திமுக சார்பில் அங்குதன் உதயசூரியன் சின்னத்திலும், மேலும் 4 சுயேட்சைகள் உள்ளிட்ட 6 பேர் போட்டியிட்டனர். கடந்த 27ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 50 வாக்குச் சீட்டுகளில் முரசு சின்னம் விடுபட்டிருந்ததால் மறு வாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டு நேற்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று காலை லேசான மழை இருந்ததால், வாக்காளர்களின் வருகை மிகக் குறைந்தே காணப்பட்டது. அதனை தொடர்ந்து அதிகளவில் பெண்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று வாக்களித்தனர். பின்னர் பகல் ஒரு மணியளவில் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. ஒருவர் பின் ஒருவராக வந்து வாக்களித்த வண்ணம் உள்ளனர். கூழையாறு 159 எண்ணுள்ள வாக்குச் சாவடியில் ஊராட்சி வார்டு எண் 3 மற்றும் 4 ஆகிய வார்டுகளில் உள்ள மொத்த வாக்காளர்கள் 974 பேர். இதில் நேற்று மாலை 3 மணி நிலவரப்படி 57 சதவிகிதத்தினர் வாக்களித்திருந்தனர். கடந்த 27ம் தேதி அன்று இதே மையத்தில் மொத்தத்தில் 660 வாக்குகள் பதிவாகியிருந்தனர்.

Tags : cellar ,
× RELATED நகராட்சி முழுவதும் பாலாற்று குடிநீர்...