×

நாகை மாவட்டத்தில் 2ம் கட்ட தேர்தல் 3 மணி நிலவரப்படி 64.53% வாக்குப்பதிவு

நாகை, டிச.31: நாகை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நேற்று 3 மணி வரை 64.53 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. நாகை மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்டமாக நாகை, திருமருகல், கீழ்வேளூர், சீர்காழி, செம்பனார்கோயில், கொள்ளிடம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 27ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதையடுத்த எஞ்சிய தலைஞாயிறு, கீழையூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் காலை 9 மணி நிலவரப்படி 2 லட்சத்து 26 ஆயிரத்து 545 ஆண் வாக்காளர்களில் 30 ஆயிரத்து 958 பேர் வாக்களித்து இருந்தனர். 2 லட்சத்து 29 ஆயிரத்து 232 பெண் வாக்காளர்களில் 18 ஆயிரத்து 961 பேர் வாக்களித்து இருந்தனர். ஆக மொத்தம் 4 லட்சத்து 55 ஆயிரத்து 782 வாக்காளர்களில் 49 ஆயிரத்து 919 பேர் வாக்களித்து இருந்தனர். இது 10.95 சதவீதம் ஆகும். அதேபோல் காலை 11 மணி நிலவரப்படி 2 லட்சத்து 26 ஆயிரத்து 545 ஆண் வாக்காளர்களில் 64 ஆயிரத்து 947 பேர் வாக்களித்து இருந்தனர். 2 லட்சத்து 29 ஆயிரத்து 232 பெண் வாக்காளர்களில் 58 ஆயிரத்து 446 பேர் வாக்களித்து இருந்தனர். ஆக மொத்தம் 4 லட்சத்து 55 ஆயிரத்து 782 வாக்காளர்களில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 593 பேர் வாக்களித்து இருந்தனர். இது 27.07 சதவீதம் ஆகும்.

மதியம் 1 மணி நிலவரப்படி 2 லட்சத்து 26 ஆயிரத்து 545 ஆண் வாக்காளர்களில் 92 ஆயிரத்து 83 பேர் வாக்களித்து இருந்தனர். 2 லட்சத்து 29 ஆயிரத்து 232 பெண் வாக்காளர்களில் 1 லட்சத்து 68 பேர் வாக்களித்து இருந்தனர். ஆக மொத்தம் 4 லட்சத்து 55 ஆயிரத்து 782 வாக்காளர்களில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 151 பேர் வாக்களித்து இருந்தனர். இது 42.16 சதவீதம் ஆகும். மதியம் 3 மணி நிலவரப்படி 2 லட்சத்து 26 ஆயிரத்து 545 ஆண் வாக்காளர்களில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 932 பேர் வாக்களித்து இருந்தனர். 2 லட்சத்து 29 ஆயிரத்து 232 பெண் வாக்காளர்களில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 199 பேர் வாக்களித்து இருந்தனர். இதர வாக்காளர்கள் 5 பேரில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. ஆக மொத்தம் 4 லட்சத்து 55 ஆயிரத்து 782 வாக்காளர்களில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 131 பேர் வாக்களித்து இருந்தனர். இது 64.53 சதவீதம் ஆகும்.

Tags : phase ,Naga District 2 ,
× RELATED வேட்பாளர்களுக்கான 3ம் கட்ட ஒத்திசைவு கூட்டம்