×

ஜன. 2ல் நடக்கிறது மாயனூர் ரயில்வே கேட்டை அடிக்கடி மூடுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

கரூர், டிச. 31: கரூர் மாவட்டம் மாயனூர் ரயில்கேட் பகுதியை எளிதாக கடந்து செல்லும் வகையில் மாற்று ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து கதவணை செல்லும் சாலையோரம் கரூர் திருச்சி ரயில்வே தண்டவாளப் பாதை குறுக்கிடுகிறது. தினமும் நாளொன்றுக்கு 30க்கும் மேற்பட்ட முறை ரயில்செல்வதால் கேட் அடிக்கடி மூடப்பட்டு விடுகிறது.
இதன் காரணமாக, ரயில்வே கேட்டின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை தினமும் அனுபவித்து வருகின்றனர்.

இந்த ரயில்வே கேட்டை தாண்டி, நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்ட பகுதிகளுக்கும், செல்லாண்டியம்மன் கோயில், கதவணை போன்ற பகுதிளுக்கும் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ரயில் செல்லும் சமயங்களில் எல்லாம் கேட் மூடப்பட்டு விடுவதால் அனைத்து தரப்பினர்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு தீர்வு காணப்படும் வகையில், வேறொரு பகுதியில் உயர்மட்ட பாலம் அமைப்பது போன்ற ஏற்பாடுகள் ஆலோசிக்கப்பட்டதாகவும், அந்த திட்டமும் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வரும் இந்த பகுதியில் ரயில்வே கேட்டை எளிதாக பாதுகாப்பான முறையில் கடந்து செல்ல தேவையான மாற்று ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு இதற்காக நிரந்தர தீர்வு காணும் வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Tags : Mayanur ,civilians ,motorists ,
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை