×

ஓட்டு எண்ணிக்கையில் ஆசிரியர்களை ஈடுபடுத்த எதிர்ப்பு

வத்திராயிருப்பு, டிச.31:  ஓட்டு எண்ணிக்கைக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்துவதற்கு ஆசிரியர் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முத்தையா கூறுகையில், ஏற்கனவே ஆசிரியைகள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். மற்ற துறைகளை விடுத்து ஆசிரியைகளை பழிவாக்கும் நோக்கத்தோடு தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் நடந்து வருகிறது. அத்தியாவசிய துறைகள் தவிர்த்து மற்ற மத்திய, மாநில அரசு ஊழியர்களை பயன்படுத்தலாம். ஆனால் தேர்தல் ஆணையம் செய்வதில்லை.

அடுத்து அரசுப் பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டிய சூழ்நிலையில் 2ம் தேதி காலையில் இருந்து 3ம் தேதி அதிகாலை வரை  ஓட்டு எண்ணிக்கையில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது மிகுந்த மனஅழுத்தத்தை தரும். இதுவரை ஓட்டு எண்ணிக்கைக்கான நியமன ஆணைகள் தொலைபேசி வாயிலாக அழைத்து ஆணை தரப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி முறையாக வழங்குவதாக கூறியிருந்தார்கள். ஆனால் வழங்கவில்லை. இன்று வழங்கப்படுமா என தெரியவில்லை என்று தெரிவித்தார்.

Tags : teachers ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...