×

வத்திராயிருப்பு அருகே தென்னையை சாய்த்த யானைகள் விவசாயிகள் கவலை

வத்திராயிருப்பு, டிச.31:  வத்திராயிருப்பு அருகே தோப்பிற்குள் புகுந்த யானைகள் தென்னை மரங்களை சாய்த்து நாசம் செய்தன. வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கான்சாபுரத்தில் இருந்து அத்திக்கோவில் செல்லும் வழியில் கான்சாபுரத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இங்கு 13 ஏக்கரில் தென்னை, மா, பலா உள்ளிட்ட மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வேலிகளை உடைத்துக்கொண்டு தோட்டத்திற்குள் புகுந்த யானைகள், 10 தென்னை மரங்களை வேருடன் சாய்த்து நாசம் ெசய்தன. அதோடு 140 தென்னங்கன்றுகளில் உள்ள தென்னங்குறுத்துகளை அப்படியே பிடிங்கி தின்று சென்றுவிட்டது. விவசாயி அருணாச்சலத்தின் கண் எதிரேயே யானைகள் மரங்களை நாசம் செய்தன.

இது குறித்து விவசாயி அருணாச்சலம் கூறுகையில், வனத்துறையினர் இந்த பகுதிகளில் கூடாரம் அமைத்து இரவு நேரங்களில் ரோந்து சுற்றி வந்தால் யானைகள் மற்றும் காட்டெருமை உள்ளிட்ட விலங்கினங்கள் தோட்டத்தில் வந்து நாசம் விளைவிப்பதை தடுக்க முடியும். வனத்துறையினர் அகழிகள் தோண்டி கம்பி வேலி அமைக்க வேண்டும். எனக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, யானைகள் தோட்டத்திற்குள் வராமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Vatarayapuram ,
× RELATED வத்திராயிருப்பு அருகே...