×

குடியிருப்பிற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் மூணாறில் விளைநிலங்கள் சேதம்

மூணாறு,டிச.31: மூணாறில் சொக்கநாடு எஸ்டேட் பகுதிகளில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நுழைந்த காட்டு யானைகள் விவசாய நிலங்களை துவசம் செய்தது. இதனால் தொழிலாளர்கள் கடும் பீதியில் உள்ளனர். மூணாறில் கேடிஹச்பி நிறுவனத்திற்கு சொந்தமான சொக்கநாடு எஸ்டேட் பகுதி உள்ளது. இங்கு ஏராளமான தோட்டத்தொழிலாளர்கள் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு  காட்டுப்பகுதியில் இருந்து இறங்கிய யானை கூட்டம், சொக்கநாடு தொழிலாளர் குடியிருப்புக்குள் நுழைந்தது .  5 வீடுகளில் நுழைந்த யானைகள் அங்கு பயிரிட்டுள்ள பீன்ஸ்,காரட் போன்ற ஏரளமான காய்கறிகளை துவசம் செய்தன. அத்துடன் வாகனங்களையும் சேதப்படுத்
தின.

கடந்த 4 நாட்களாக யானைகள்  இப்பகுதியில் முகாமிட்டுள்ள காரணத்தால் இரவு தேயிலை தோட்டங்களுக்கும், தேயிலை தொழிற்சாலைகளுக்கும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பயத்துடன் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில்,`` நேற்று முன்தினம் இரவு வந்த யானைகள் நேற்று மாலை வரை சொக்கநாடு பகுதியில் இருந்ததால், காலை மற்றும் இரவு நேரங்களில் தொழிலாளர்கள் வேலைக்கு பயந்து கொண்டே செல்லும் நிலை  ஏற்பட்டுள்ளது. எனவே,  குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகள் நுழைவதை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் உரிய  நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.

Tags : farmland ,
× RELATED கொள்ளிடத்தில் தொடர்ந்து...