×

ஐயப்பன் மண்டல பூஜை

பரமக்குடி, டிச.31: பரமக்குடி நகராட்சி பகுதியான காட்டு பரமக்குடி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட திரௌபதை அம்மன் கோவிலில் சபரி கிரீஷா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பாக 5ம் ஆண்டு மண்டல பூஜை மற்றும் அன்னதான பெருவிழா நடைபெற்றது. மண்டல பூஜை விழாவில் பக்தர்கள் குழுவின் குருசாமி நாகநாதன், பாலகுரு தலைமையில் 26 வகையான பூக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஐயப்பனுக்கு 18 அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன.தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தை மதுரை சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் தலைவர் பேச்சிமுத்து, ஏஞ்சல் தேவகி முதியோர் இல்லம் பிரபாகர், சிவகங்கை பஜனை பாடகர் அறிவழகன் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். ஏழை எளிய மக்கள் என 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Iyappan Mandala Pooja ,
× RELATED இளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்