×

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் வாக்களிக்க முடியாமல் தொழிலாளி ஏமாற்றம்

தஞ்சை, டிச. 31: இறந்தவர் என வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதால் ஓட்டு போட முடியாமல் ஏமாற்றுத்துடன் தொழிலாளி ஒருவர் திரும்பி சென்றார். தஞ்சை அருகே கொ.வல்லுண்டாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி மாரிமுத்து (50). இவர் நேற்று காலை உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேங்கராயன்குடிகாடு அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்றார். அவருக்கு பூத் சிலிப் வழங்கப்படாததால் வாக்காளர் அடையாள அட்டையுடன் சென்ற அவரது பெயரை தேர்தல் பணியாளர்கள் பட்டியலில் தேடியுள்ளனர். ஆனால் அவரது பெயர் பட்டியலில் இல்லை.அவர் இறந்து விட்டதாகவும் அதனால் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது. ஆனால் இறந்துபோன அவரது தந்தை வீரையன் பெயர், பட்டியலில் இருந்தது கண்டு மாரிமுத்து அதிர்ச்சி அடைந்தார்.இந்நிலையில் தன்னை வாக்களிக்க அனுமதிக்ககோரி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மாரிமுத்து வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களுடன் வாக்குவாதம் செய்த மாரிமுத்து ஒருகட்டத்தில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.இதுகுறித்து மாரிமுத்து கூறும்போது, எனது பெயரை இணைக்க பலமுறை விஏஓ மூலம் விண்ணப்பித்து விட்டேன். ஆனால் வேண்டும் என்றே இணைக்கவில்லை. இதனால் கடந்த எம்எல்ஏ, எம்பி தேர்தலிலும் ஓட்டு போட முடியவில்லை. அப்போதும் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கூறினேன்.நடவடிக்கை எடுப்பதாக கூறினார்களே தவிர ஒன்றும் நடக்கவில்லை. தற்போதும் ஓட்டு போட முடியவில்லை. நான் இறந்துவிட்டதாக கூறிய பதிவு செய்துள்ள அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுவேன் என்றார்.

Tags : removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...