×

ஏழு ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் 70.4சதவீதம் வாக்குப்பதிவு

சிவகங்கை, டிச. 31: சிவகங்கை மாவட்டத்தில் ஏழு ஒன்றியங்களில் நேற்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 70.4சதவீதம் வாக்குகள் பதிவானது. சிவகங்கை மாவட்டத்தில் ஏழு ஒன்றியங்களுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7மணிக்கு தொடங்கியது. காலை நேரத்தில் மிகவும் மந்தமாகவே வாக்குப்பதிவு நடந்தது. காலை 7மணியிலிருந்து 9மணி வரை 8.88சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. பின்னர் 11மணி வரை 18.8சதவீதமும், 1மணி வரை 42.4சதவீத வாக்குகள் என வாக்குப்பதிவு சூடு பிடிக்க தொடங்கியது. பின்னர் பகல் 1மணி முதல் 3மணிவரை 54.3சதவீத வாக்குகள் பதிவாகின.

இறுதியாக மாலை 5மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மொத்தம் 70.4சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. பகல் 1மணி முதல் மாலை 5மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு கூடுதலாக இருந்தது. மொத்தம் ஏழு ஒன்றியங்களில் உள்ள 4லட்சத்து ஆயிரத்து 786வாக்குகளில் 2லட்சத்து 84ஆயிரத்து 50வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக எஸ்.புதூர் ஒன்றியத்தில் 78.6சதவீத வாக்குகள் பதிவானது. குறைந்தபட்சமாக கல்லல் ஒன்றியத்தில் 66.5சதவீத வாக்குகள் பதிவானது. தேவகோட்டை ஒன்றியத்தில் 73சதவீத வாக்குகள், கண்ணங்குடி ஒன்றியத்தில் 69.3சதவீத வாக்குகள், சாக்கோட்டை ஒன்றியத்தில் 67சதவீத வாக்குகள், திருப்பத்தூர் ஒன்றியத்தில் 70சதவீத வாக்குகள், சிங்கம்புணரி ஒன்றியத்தில் 73.4சதவீத வாக்குகள் பதிவானது.

Tags : union ,elections ,
× RELATED ஒன்றிய அமைச்சருக்கு கர்நாடகாவில் சீட் மறுப்பு