கும்பகோணம் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை

கும்பகோணம், டிச. 31: கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது. மாநில இளைஞரணி பொது செயலாளர் குருமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் சேகர் முன்னிலை வகித்தனர். நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பிப்ரவரி 16ம் தேதி தஞ்சையில் நடக்கும் ஆன்மிக அரசியல் மாநாட்டுக்கு ஆன்மிகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களை சந்தித்து அழைப்பு விடுப்பது. கும்பகோணம் பகுதியில் உள்ள பல கோயில்களில் மதில் சுவர்கள், கோயிலின் மதில் சுவற்றில் உள்ள சிலைகள் சேதமடைந்துள்ளது குறித்து பலமுறை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து ஜனவரி 20ம் தேதி மனு அளித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது. கும்பகோணத்தில் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம் செய்யாமல் உள்ளது.எனவே தமிழக அரசு உடனடியாக கோயில்களில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணியை துவங்க வேண்டும். கும்பகோணத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குறைந்த வாடகைக்கு யாத்ரி நிவாஸ் கட்டிடம் கட்ட வேண்டும். சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.கும்பகோணத்தில் குளங்களை தூர்வாரி சுத்தப்படுத்தி தண்ணீர் விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் வைரவேல், நகர தலைவர் பாலா மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : roads ,area ,Kumbakonam ,
× RELATED கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மேலவீதி,...