×

வலங்கைமான் ஒன்றியத்தில் 2ம்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 81% வாக்குப்பதிவு

வலங்கைமான், டிச.31: வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று 328 பதவிகளுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 81 சதவீதம் வாக்கு பதிவானது.. து.வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு மாவட்டக்குழு, 15 ஒன்றியக்குழு, ஐம்பது கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 342 கிராம ஊராட்சி வார்டுகள் உள்ளன. மொத்தம் உள்ள 408 பதவிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து கடந்த 9ம்தேதி முதல் 16ம்தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளில் 217 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர். அதன் மூலம் இரண்டு ஊராட்சி தலைவர்கள் மற்றும் 78 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வானர்கள். மொத்தம் உள்ள 408 பதவிகளில் ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்ட 80 பதவிகள் நீங்கலாக உள்ள 328 பதவிகளுக்கு தற்போது ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இப்பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்தெடுக்கும் விதமாக மொத்தம் 33 ஆயிரத்து 834 ஆண் வாக்காளர்களும், 33 ஆயிரத்து 433 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் இரண்டு பேரும் உள்ளிட்டோர் வாக்களிக்கும் விதமாக 180 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இவை 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. இவ்வாக்கு சாவடிகளில் நேற்று அமைதியான முறையில் வாக்குபதிவு நடைபெற்றது. இதில் 26 ஆயிரத்து 702 ஆண்வாக்காளர்களும், 27 ஆயிரத்து 690 பெண் வாக்காளர்களும் வாக்களித்தனர்.நேற்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 81.20 சதவீதம் வாக்கு பதிவானது.வலங்கைமான் ஒன்றியத்தில் அதிகமான வாக்காளர்களை கொண்ட ஆவூர் ஊராட்சியில் வாக்குபதிவு நேரத்தை கடந்து வாக்காளர்கள் வாக்களிக்க நின்றனர். அதனையடுத்து 119 வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பின்னர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் ஊராட்சியில்அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் இருந்த 73வது வாக்கு சாவடியில் வாக்காளர்கள் பூத் சிலிப்போடு கூடுதலாக ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணம் கொண்டு வந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என வாக்கு பதிவு அலுவலர் கூறினார். பின்னர் வாக்காளர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் மேல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பூத் சிலிப்பை வைத்து வாக்களிக்க அரை மணிநேர தாமதத்திற்கு பிறகு அனுமதித்தார். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வலங்கைமான் ஒன்றியத்தில் அதிகமான வாக்காளர்களை கொண்ட ஆவூர் ஊராட்சியில் வாக்குபதிவு நேரத்தை கடந்து வாக்காளர்கள் வாக்களிக்க நின்றனர். இதையடுத்து 119 வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பின்னர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.


Tags :
× RELATED ஒவ்வொரு ஊராட்சியிலும் 4 நாள் மருத்துவ முகாம்