×

ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு 10 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

திருவாரூர், டிச.31: திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 10 வாக்குஎண்ணும் மையங்களிலும் மாவட்ட எஸ்பி துரை தலைமையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி ,முத்துப்பேட்டை, கோட்டூர் மற்றும் மன்னார்குடி என 5 ஒன்றியங்களுக்கு கடந்த 27ம்தேதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த ஒன்றியங்களில் பதிவான வாக்குகளின் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அன்று இரவே வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு சம்மந்தப்பட்ட ஒன்றியங்களின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் அங்குள்ள பாதுகாப்பு அறைகளில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூரில் வாக்கு எண்ணும் மையமான கிடாரங்கொண்டான் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி, திருத்துறைப்பூண்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்துப்பேட்டையில் கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்னார்குடியில் ராஜகோபாலசுவாமி அரசு கலைக் கல்லூரி ஆகிய 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு மாவட்ட எஸ்பி துரை மேற்பார்வையில் மூன்று அடுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு 2ஷிப்ட்டுகளாக 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் 2 ம் கட்ட தேர்தல் நேற்று கொரடாச்சேரி, நன்னிலம்,குடவாசல்,வலங்கைமான் மற்றும் நீடாமங்கலம் என 5 ஒன்றியங்களுக்கு நடைபெற்றது. இந்த ஒன்றியங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு வாக்கு எண்ணும் மையங்களாக கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நன்னிலம் ஒன்றியத்திற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குடவாசல் ஒன்றியத்திற்கு ஓகை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வலங்கைமான் ஒன்றியத்திற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு அகரபொதக்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து நேற்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் வாக்குபெட்டிகள் அனைத்தும் அரசியல் கட்சியினரின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு அதன் பின்னர் இரவு முழுவதும் விடிய விடிய ஒவ்வொரு வாக்குச்சாவடியில் இருந்தும் வாகனங்கள் மூலம் போலீஸ் பாதுகாப்பு டன் வாக்குப்பெட்டிகள் கொண்டு வரப்பட்டு அந்தந்த ஒன்றியங்களின் வாக்கு எண்ணும் மையங்களின் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் பாதுகாப்பு அறைகளில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கும் மாவட்ட எஸ்பி துரை தலைமையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வரும் 2 ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் தடுப்புகள் அமைப்பது, கண்காணிப்பு கேமரா பொருத்துவது மற்றும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதற்கு ஒலிபெருக்கிகள் அமைப்பது என்பது உட்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நேற்று அலுவலர்கள் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

ஜன.2ம் தேதி வாக்கு எண்ணிக்கை
இந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கும் மாவட்ட எஸ்பி துரை தலைமையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வரும் 2 ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் தடுப்புகள் அமைப்பது, கண்காணிப்பு கேமரா பொருத்துவது என்பது உட்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நேற்று அலுவலர்கள் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

Tags : Police Security ,Rural Local Elections ,Voting Counters ,
× RELATED தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில்...