×

திருத்துறைப்பூண்டியில் பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையங்கள்

திருத்துறைப்பூண்டி டிச.31: திருத்துறைப்பூண்டியில் பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தாலுகா மற்றும் நகர் எனஇரண்டு காவல் நிலையம் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுத்த முடியும் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். ஆனால் திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகரபகுதிக்கும் ஒரு காவல் நிலையம் மட்டும் தான் உள்ளதால் குற்றங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை தான் தொடர்ந்து உள்ளது. மேலும் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம், மற்றும் அரசு மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் ஆகிய 3 இடங்களில் புறக்காவல் நிலையம் உள்ளது. போலீஸ் பற்றாக்குறையால் 3 இடங்களிலும் உள்ள புறக்காவல் நிலையம் பூட்டியேதான் கிடக்கிறது. எனவே பொதுமக்கள்நலன் கருதி புறகாவல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் திருவாரூர் எஸ்.பி-க்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 இதுகுறித்து வர்த்தகர்கள சங்கதலைவர் செந்தில்குமார் கூறுகையில் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் நகருக்கு வந்து செல்ல சிரமம் இல்லாமல் இருக்க காவல் நிலையம் மற்றும் போக்குவரத்து காவல் நிலையத்துக்கும் கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும் என்றார்.இது குறித்து மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிநகர செயலாளர் ரகுராமன் கூறுகையில் திருத்துறைப்பூண்டியில் 3 புறக்காவல் நிலையமும் பல நாட்களாக பூட்டி கிடக்கிறது. தற்போது உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இருந்த காவலர்களும் வேறு பணிக்கு சென்றுவிட்டனர். இனி வாக்கு எண்ணிக்கை முடிந்து தான் வருவார்கள்.அதுவரை பார்க்காமல் 3 புறக்காவல் நிலையமும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி பகுதிக்கு கூடுதல் காவல் நியமிக்க எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Outposts ,Tirupur ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...