×

மாநில சிலம்ப போட்டி நத்தம் மாணவர்கள் வெற்றி

நத்தம், டிச. 31: மாநில சிலம்ப போட்டியில் நத்தம் மாணவர்கள் வெற்றி பெற்றனர். மாநில சிலம்ப விளையாட்டு போட்டிகள் மதுரையில் சமீபத்தில் நடந்தது. இதில் நத்தம் ஒன்றியப்பகுதியிலிருந்து அய்யனார்புரம் சர்வசேவா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ, மாணவிகள் 15 பேர் பங்கேற்றனர்.
இதில் மாணவர்கள் 4 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை அவர்கள் பரிசாக பெற்றனர்.

Tags : State ,Silambam Competition Nathum ,
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...